புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எந்த இலாக்காவையும் விட்டு வைக்காத டி ராஜேந்திரரின் 5 படங்கள்.. வீராச்சாமியாய் மும்தாஜ் உடன் செஞ்ச ரவுஸ்

1980 ஆம் ஆண்டு முதல் ஒரு இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய டி ராஜேந்தர் அவர்கள் 2007 வரை படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். சமீபத்தில் திரைப்படங்களில் நடிகராகவும், பாடகராகவும் தன்னுடைய கலை பயணத்தை தொடர்ந்து வருகிறார். படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பு, வசனகர்த்தா, பாடலாசிரியர் , பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு இருப்பவர்தான் இவர். அதே போன்று தமிழ் சினிமாவில் நிறைய சென்டிமென்ட் படங்களையும் இவர்தான் எடுத்திருக்கிறார்.

என் தங்கை கல்யாணி: 1988 ஆம் வருடம் டி ராஜேந்தர் இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் தான் என் தங்கை கல்யாணி. பாசமலர், கிழக்கு சீமையிலே போன்ற படங்களுக்குப் பிறகு தமிழில் வெளியான தங்கை சென்டிமென்ட் திரைப்படம் இதுதான். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Also Read:டி ராஜேந்தர் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. சுயரூபம் தெரிந்து விரட்டி விட்ட மனுஷன்

உயிருள்ளவரை உஷா: 1983 ஆம் ஆண்டு ராஜேந்தர் மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உயிருள்ளவரை உஷா. இந்த படத்தில் தலைப்பிற்கு ஏற்றவாறு காதல் சென்டிமென்ட் ரசிகர்களை திளைக்க வைத்திருந்தார் டி ராஜேந்தர் அவர்கள். மேலும் இந்த படத்தில் தான் அவருக்கு காதலும் கைகூடி படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு தாயின் சபதம்: டி ராஜேந்தர் அவர்கள் முழுக்க முழுக்க அம்மா சென்டிமென்டில் ரசிகர்களை கரைய வைத்த திரைப்படம் ஒரு தாயின் சபதம். இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த இவர் ஒளிப்பதிவையும் அவரே செய்திருந்தார். இந்த படத்திலும் நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

Also Read:அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

ஒரு வசந்த கீதம் : 1994 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கி, நடித்த திரைப்படம் வசந்த கீதம். இந்த படத்தில் ராஜேந்திர் உடன் கௌதமி, ஜனகராஜ், சில்க்ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் வசந்த கீதம் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து அவருடைய தம்பி குறளரசனும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இந்த படம் முழுக்க முழுக்க குழந்தை சென்டிமென்ட் திரைக்களத்தை கொண்டது.

வீராசாமி: தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு என்றால் மகன் ஹீரோவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்போது அப்பாவும் ஹீரோவாக நடித்தது தான். சிலம்பரசன் மிகப்பெரிய வெற்றி ஹீரோவாக இருந்த சமயத்திலேயே ராஜேந்தர், வீராசாமி திரைப்படத்தில் ஹீரோவாக அசத்தியிருந்தார். மும்தாஜ் உடன் காதல், மற்றும் ஆக்சன் காட்சிகள் என்று பட்டையை கிளப்பி இருந்தார் இவர்.

Also Read:முரட்டு காதலை சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த டி ராஜேந்தர்.. உருகி உருகி செதுக்கிய 5 படங்கள்

Trending News