வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Pandian Stores 2: கதிருக்காக ஆக்ரோஷமாக களமிறங்கிய ராஜி.. குமரவேலுவின் அடாவடித்தனத்தால் ஒன்றாக இணைந்த ஜோடி புறாக்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் ஆசைப்பட்ட மாதிரி மூத்த மகன் சரவணனின் கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஒவ்வொருவரும் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதே மாதிரி எவ்வளவு செலவு பண்ணாலும் பரவாயில்லை சரவணன் ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் அமைய வேண்டும் என்று பாண்டியன் பார்த்து பார்த்து பண்ணுகிறார்.

அதற்கு காரணம் தான் வேண்டாம் என்று சொன்ன ஒரு காரணத்துக்காக சரவணன் காதலித்த பெண்ணை மறந்து அப்பா சொன்னபடி கேட்டதனால் பாண்டியன், சரவணனுக்கு அதிக சலுகை கொடுக்கிறார். ஆனால் வீட்டில் பார்த்து முறைப்படி வரும் மருமகளால் ஒட்டுமொத்த ஒற்றுமையும் நிலைகுலைய போகப் போகிறது என்பது இனிதான் அவருக்கு புரியப்போகிறது.

அது மட்டுமில்லாமல் செந்தில் மற்றும் கதிர் சூழ்நிலை காரணமாக வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும், அவர்களால் இப்பொழுது வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. அத்துடன் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தில் ஒருவராக மீனா மற்றும் ராஜி ஒத்துப் போய் வாழ்ந்து வருகிறார்கள்.

மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிய கதிர் ராஜி

முக்கியமாக ராஜி சந்தர்ப்ப சூழ்நிலையால் கதிரை கல்யாணம் பண்ணினார். அதே மாதிரி கதிருக்கும் ராஜியை கண்டால் சுத்தமாக பிடிக்கவே செய்யாது. அப்படிப்பட்ட இருவரும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மனசை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ராஜிக்கு கதிர் மீது நல்ல அபிப்ராயம் வந்ததோடு மட்டுமல்லாமல் ஆசையும் வந்துவிட்டது.

மேலும் தற்போது கதிரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராஜ்ஜியின் அண்ணன் குமரவேலு சாப்பாடு ஆர்டர் பண்ணி கதிரை இங்க வா அங்க வா என்று சீண்டி பார்க்கிறார். ஆனால் கதிரின் வேலை என்பதால் ரொம்பவே பொறுமையாக இருந்து குமரவேலுவிடம் சாப்பாட்டை ஒப்படைத்து விடுகிறார். இதனை கூடவே இருந்து பார்த்த கதிரின் மாமா வீட்டிற்கு வந்ததும் ராஜியிடம் நடந்த விஷயங்களை சொல்கிறார்.

உடனே ராஜி அண்ணன் பண்ணினது தப்பு சித்தப்பா. என்கிட்ட மாட்டட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு என்று கோபமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராஜியின் அண்ணன் குமரவேலு வீட்டிற்கு போகிறார். இதை பார்த்த ராஜி கோபத்தில் கீழே கிடந்த கல்லை கொண்டு குமரவேலு மீது அடிக்கிறார்.

ஆனால் குமரவேலு, கதிர் தான் இதை பண்ணியிருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கதிரை அடிக்கப் போகிறார். அப்படி கதிரே அடிக்க கை ஓங்கும் பொழுது இடையில் ராஜி புகுந்து விடுகிறார். அத்துடன் அண்ணனை பார்த்து பேசாம உன் வேலையை பார்த்துட்டு போகலைன்னு வச்சுக்கோ அம்புட்டு தான் அண்ணன் கூட பார்க்க மாட்டேன் அசிங்கமாக போய்விடும் என்று சொல்லி கிளம்ப சொல்கிறார்.

உடனே குமரவேலு முறைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பி விடுகிறார். இதெல்லாம் பார்த்த கதிர், ராஜியிடம் ஆளாக்கு சைஸில் இருந்து கொண்டு எகிறி எகிறி சண்டை போடுற என்று சொல்கிறார். உடனே ராஜி கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்கிறார். இதை கேட்ட கதிர் சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டு ராஜியை பார்த்து வெட்கப்படுகிறார்.

கதிருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ராஜி ஆவேசமாக களமிறங்கி சப்போர்ட் செய்வதை பார்க்கும் பொழுது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் நெருக்கமாக ஆவதற்கு முக்கிய காரணம் ராஜியின் அண்ணன் குமரவேலு தான். இவர் செய்யும் அடாவடித்தனத்தால் கதிர் மற்றும் ராஜியின் புரிதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Trending News