புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீனாவிடம் உதவி கேட்ட ராஜி, வாயடைத்துப் போன பாண்டியன்.. சந்தோஷத்தில் குதிக்கும் செந்தில், கோபத்துடன் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் மற்றும் கதிர் ஒருவரை ஒருவர் நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். அதாவது எந்த ஒரு விஷயம் உன்னிடம் சொன்னாலும் அதை உனக்குள்ளே வைத்திருக்க முடியாதா? உடனே மீனா அண்ணியிடம் சொல்லிவிட்டாய், அதைக் கேட்டுக் கொண்டு ராஜி என்னிடம் வந்து கேள்வி கேட்டு திட்டுகிறார் என்று கதிர், செந்திலிடம் செல்ல சண்டை போடுகிறார்.

உடனே செந்தில் நீ மட்டும் என்ன சும்மாவா? நான் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி வேலைக்கு போக போறேன் என்கிற விஷயத்தை ராஜிடம் சொல்லி இருக்கிறாய். உடனே மீனாவிடம் சொல்ல, மீனா என்னிடம் வந்து கேட்கிறாள் என செந்தில் கதிரிடம் சொல்கிறார். ஆக மொத்தத்தில் நம்மளை கோமாளி ஆகிவிட்டு இரண்டு பேரும் எல்லாத்தையும் பேசி இருக்கிறார்கள்.

மனைவி கேட்டதும் ஓகே என்று தலையாட்டிய பாண்டியன்

இதில் நாம் தான் மாட்டிக்கொண்டோம் என்று இருவரும் புலம்புகிறார்கள். இதனை அடுத்து பாண்டியன் அனைவரையும் கூப்பிடுகிறார். உடனே வீட்டிற்குள் அனைவரும் ஆஜராகி விடுகிறார்கள். அப்பொழுது சரவணனிடம் மூன்று நாள் வேலைக்கு லீவு கேட்க முடியுமா என்று பாண்டியன் கேட்கிறார். உடனே சரவணன் ஆர்வக்கோளாறுல என்னாச்சுப்பா கடையில ஏதாவது வேலை அதிகமாக இருக்கிறதா? நான் லீவு கேட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு பாண்டியன் அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீயும் தங்கமயிலும் மூன்று நாளைக்கு வெளியிலே எங்கயாவது போயிட்டு வாங்க என்று சொல்கிறார். அப்பொழுது பழனிச்சாமி, மச்சான் உங்களை ஹனிமூன் போக சொல்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் தங்கமயில் மூஞ்சியில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்து விட்டது. ஆனால் சரவணன், ஏன் அப்பா எனக்கு முன்னாடி இரண்டு பேர் கல்யாணம் ஆகி எங்கேயும் போகாமல் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது நான் மட்டும் போனால் நல்லா இருக்காது என்று சொல்கிறார். உடனே பாண்டியன், அதற்குத்தான் குடும்பத்துடன் எல்லாரும் கொடைக்கானல் போயிட்டு வந்தோம் என்று சொல்லிய பொழுது மீனா சிரித்துக் கொள்கிறார். உடனே பாண்டியனிடம் யாரும் எதுவும் சொல்லாமல் அவர்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். அப்பொழுது மீனா மற்றும் ராஜியிடம், கோமதி உங்களுக்கு ஏதாவது வருத்தமாக இருக்கிறதா என்று கேட்கிறார்.

அதற்கு அவர்கள் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மாமா போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார்கள். அத்துடன் சரவணன் கொஞ்சம் பீல் பண்ணுகிறார். இதை பார்த்த செந்தில் கதிர் எங்களுக்கு பிரச்சினை இல்லை. நீ சந்தோஷமாக போயிட்டு வா என்று சமாதானப்படுத்துகிறார்கள். இதற்கிடையில் எப்படியாவது கதிருக்கு நம் உதவி செய்ய வேண்டும் என்று ராஜி, மீனாவிடம் மறுபடியும் டியூஷன் எடுப்பதற்கு உதவி கேட்கிறார்.

ஆரம்பத்தில் யோசித்த மீனா, ராஜு கெஞ்சி கேட்டதால் உதவி பண்ணுவதற்கு சம்மதம் கொடுக்கிறார். ஆனால் மாமாக்கு தெரிந்தால் இது பிரச்சினையாகும் என்று மீனா சொல்கிறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா இந்த முறை எதுவும் சொல்லாதபடி நான் வாயை அடைத்து விடுகிறேன் என்று ராஜி தைரியமாக டியூஷன் எடுப்பதற்கு இறங்கப் போகிறார். ஆனால் இந்த விஷயம் கதிர்க்கு தெரிந்தால் நிச்சயமாக கோபப்படுவார்.

அடுத்ததாக கோமதி, பாண்டியனிடம் போய் பேசுவதற்கு கடைக்கு போகிறார். அங்கே 3 பிள்ளைகளையும் சேர்த்து ஹனிமூன்க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கிறார். உடனே பாண்டியனும் சம்மதம் கொடுக்கப் போகிறார். இதை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த செந்தில் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News