வெள்ளிக்கிழமை, ஜனவரி 31, 2025

பாண்டியனிடம் இருந்து தப்பித்துப் போன ராஜி கதிர்.. சரவணன் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டார், பீல் பண்ணும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டில் இருப்பவர்கள் என்னதான் சொன்னாலும் நாம் எடுத்து வைக்கும் பாதையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ராஜியை சமாதானப்படுத்தி கதிர் சென்னைக்கு கூட்டிட்டு போக தயாராகி விட்டார். அந்த வகையில் வீட்டில் இருக்கும் கோமதி, தங்கமயில் மற்றும் மீனாவிடம் சொல்லிவிட்டு ராஜி மற்றும் கதிர் சுதந்திர பறவைகளாக பாண்டியனிடமிருந்து தப்பித்து போய் விட்டார்கள்.

இவர்கள் இருவரும் காரில் போய்க்கொண்டிருக்கும் பொழுதே கதிர், ராஜிடம் ஏன் அமைதியாக இருக்கிறாய் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு வீட்டை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே கதிர், அவங்கள நினைச்சு எல்லாம் பீல் பண்ணாத. நீ எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு போலீஸ் ஜிப்பில் கெத்தா வந்து இறங்கிட்டால் அவங்க சந்தோஷப்பட்டு கொள்வார்கள்.

அத்துடன் உன் மீது இருக்கும் கோபமும் மறைந்து விடும் என்று சமாதானப்படுத்தி சென்னைக்கு கூட்டிட்டு போய்விட்டார். இதற்கிடையில் கதிர் நம் பேச்சைக் கேட்காமல் எல்லா விஷயத்தையும் அவன் இஷ்டப்படியே முடிவு எடுக்கிறான் என்று பாண்டியன் கடையிலிருந்து புலம்பி தவிக்கிறார்.

அப்பொழுது செந்தில், பழனிவேலுமிடம் இன்னும் சின்ன பிள்ளைகள் மாதிரி நெனச்சு எல்லா விஷயத்தையும் முட்டுக்கட்ட போட்டா எப்படி சமாளிக்க முடியும் மாமா என்று கேட்கிறார். எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவங்களுக்கும் சில விருப்பு வெறுப்பான விஷயங்கள் என்று இருக்கும். அதை புரிந்து கொண்டால் அவருக்கும் நன்றாக இருக்கும் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு பழனிவேலு, பாண்டியனை விட்டுக் கொடுக்காமல் அவர் பேசுவது தான் அப்படி இருக்கும். ஆனால் உண்மையில் அவரை மாதிரி ஒரு நல்ல கேரக்டர் நீ பார்க்கவே முடியாது என்று மச்சானுக்கு சப்போர்ட் பண்ணி செந்திலிடம் பேசுகிறார். இதைத் தொடர்ந்து ரூம்குள் இருக்கும் தங்கமயிலிடம் சரவணன் வந்து கதிர் பேசியது ரொம்ப தவறு.

அப்பா எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று யோசிக்காமல் அப்பாவையே எதிர்த்து பேசும் அளவிற்கு போய்விட்டான் என்று கோபமாக திட்டி பேசுகிறார். அதற்கு தங்கமயில், அவர் ஒன்றும் எதிர்த்துப் பேசவில்லை அவர் பக்கம் இருக்கும் விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்.

இப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என தங்கமயில் எதார்த்தமாக சொல்லிவிட்டார். உடனே சரவணன், அப்படி என்றால் நான் எங்க அப்பாவிடம் எதிர்த்து பேச வேண்டும் சண்டை போட வேண்டும் என்று நீயும் நினைக்கிறியா? என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது அப்பா எது செஞ்சாலும் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லி வேலைக்கு கிளம்பி விட்டார்.

இதனால் நொந்து போன தங்கமயில், அம்மாவுக்கு போன் பண்ணி நீ என்ன தான் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச. இந்த வாழ்க்கைக்காகவா நம்ம இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு பொய்களை சொல்லி சமாளித்து வருகிறோம். என்ன சொன்னாலும் உன் மாப்பிள்ளை பூம்பூம்மாடு மாதிரி அப்பா சொன்ன சரியாகத்தான் இருக்கும் என்று தலையாட்டிக் கொள்கிறார். இவரெல்லாம் வச்சு நான் என்ன பண்ண என்று புலம்புகிறார்.

அதற்கு தங்கமயிலின் அம்மா ஆரம்பத்தில் எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க. போக போக உன் பேச்சைக் கேட்கும்படி நீ மாற்றிக்கொள், அதன் பிறகு வாழ்க்கையே உனக்கு பிடிக்க ஆரம்பித்து விடும் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், உன் மாப்பிள்ளை எல்லாம் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார்.

Trending News