Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா, அப்பாவை பார்த்து பேசுவதற்கு வீட்டிற்கு வருகிறார். வந்ததும் மீனாவின் அப்பா, செந்தில் மாப்பிள்ளை இடம் சொன்ன வேலை பற்றி என்ன நினைக்கிறாய்? வீட்டில் எப்பொழுது 10 லட்ச ரூபாய் கொடுப்பாங்க என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். அதற்கு மீனா, செந்தில் படிச்சு அதில் பாஸ் பண்ணி அரசாங்க உத்தியோகத்தில் சேரட்டும்.
இந்த காசு கொடுத்து வேலை வாங்குற பழக்கம் வேண்டாம் என்று மீனா சொல்கிறார். உடனே மீனாவின் அப்பா, ஏன் உங்க வீட்டில் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா என கேட்கிறார். அதற்கு மீனாவின் அம்மா, அந்த வீட்டில் நீ எப்படி இருக்கிறாய். உன்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போகிறார்களா, நல்ல நாள் விசேஷத்திற்கு துணிமணி வாங்கி கொடுக்கிறார்களா, உன் சம்பள பணத்தை என்ன பண்ணுகிறாய் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
உடனே மீனா, இந்த மாதிரி கேள்வி கேட்பதையெல்லாம் நிறுத்திவிடு. தேவையான துணிமணி போக வேண்டிய இடத்துக்கு எல்லாம் நாங்கள் போய்க் கொண்டு சந்தோசமாகத்தான் இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் நான் வாங்குற சம்பளம் எவ்வளவு, என்ன பண்ணுகிறேன் என்பது கூட அந்த வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது, இதுவரை கேட்டதும் இல்லை. அந்த அளவிற்கு அந்த வீட்டில் எனக்கு எல்லா சுதந்திரமும் கிடைக்கிறது என்று சொல்கிறார்.
அடுத்ததாக செந்தில் கடையில் உள்ள பொருட்களை டெலிவரி பண்ணுவதற்காக ஹோட்டலுக்கு போகிறார். அந்த ஹோட்டலில் தான் தங்கமயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செந்திலை பார்த்த தங்கமயில் மறைந்து கொள்கிறார். இருந்தாலும் ஒரு சூழலில் இரண்டு பேரும் சந்திக்கும்படி ஆகிவிட்டது. அப்பொழுது தங்கமயில் ஆபீஸ் விஷயமாக ஒருவரை பார்த்து பேசுவதற்கு வந்தேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.
இதனை அடுத்து கதிர் கூட படித்த தோழிக்கு கல்யாணம் என்பதால் ராஜியை கூட்டிட்டு கிளம்ப போகிறார். அந்த வகையில் ராஜியை மேக்கப் பண்ணி அழகாக ரெடி பண்ணி மீனா தயார் படுத்தி விட்டார். அப்பொழுது கோமதி வந்த நிலையில் ராஜி மற்றும் மீனாவின் நட்பை பார்த்து ரொம்பவே பூரித்து போய்விட்டார். அத்துடன் கதிர், ராஜியை பார்த்ததும் மெய்மறந்து நின்று விட்டார்.
உடனே ராஜி மற்றும் கதிரை ஒன்றாக நிற்க வைத்து மீனா போட்டோ எடுத்து விடுகிறார். அதன் பிறகு இரண்டு பேரும் திருமணத்திற்கு கிளம்பி விடுகிறார்கள். அந்த போட்டோவை பார்த்து மீனா ரொம்பவே சந்தோஷமாக கோமதியிடம் சொல்கிறார். உடனே கோமதி, உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. வீட்டுக்கு வாழ வந்த ஒருத்தியுடன் நீ இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் பொழுது உண்மையிலே இந்த குடும்பம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பெருமிதமாக பாராட்டுகிறார்.
அதற்கு மீனா என்னுடைய குடும்பத்தில் நான் தனியாக இருந்து வந்ததனால் இந்த மாதிரி ஒரு தங்கச்சி எனக்கு இல்லை என்று ஏக்கம் அதிகமாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ராஜி எனக்கு ஒரு நல்ல தங்கையாக கிடைத்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து கல்யாண மண்டபத்திற்கு போன ராஜி மற்றும் கதிர் ஒருவரே ஒருவர் பார்த்து வெட்கப்பட்டு ரொமான்ஸ் பண்ணிக் கொள்கிறார்கள்.
அத்துடன் கதிரின் தோழியும் ராஜிடம் கதிர் எந்த மாதிரி பொண்ணு வேண்டும் என்று எங்களிடம் சொன்னானோ அதே மாதிரி நீயும் அவனுக்கு கிடைத்திருக்கிறாய் என்று கதிர் முன்னாடி ராஜிடம் சொல்கிறார். இதனை தொடர்ந்து பாண்டியன் மகன்கள் மற்றும் மருமகள் எல்லாம் தங்கமாக அமைந்த நிலையில் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கப் போகிறது. அதாவது அடுத்து சில வாரங்களில் அரசிக்கும் குமரவேலுக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது. இதனால் மொத்தமாக பாண்டியன் மணமடைந்து கண்கலங்கி நிற்கப் போகிறார்.