வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பாண்டியனை ஓரங்கட்டி விட்டு ராஜி மீனா எடுத்த முடிவு.. 3 ஜோடிகளாக போகும் ஹனிமூன், அடங்கிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிருக்கு எப்படியாவது தன்னால் முடிந்த உதவியை பண்ண வேண்டும் என்று ராஜி முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் டியூஷன் எடுப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கிறார். ஆனால் இவருடைய முயற்சிக்கு தடங்கலாக பாண்டியன் டியூஷன் எடுக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

அதையும் மீறி டியூஷன் எடுப்பேன் என்று ராஜி, மீனாவிடம் உறுதியாக சொல்லி உதவி கேட்டார். மீனாவும் ராஜிக்காக ரிஸ்க் எடுத்து ஹோம் டியூஷன் எடுப்பதற்கு தெரிஞ்சவரிடம் பேசிவிட்டார். ஆனால் இந்த முறை யாருக்கும் நம் என்ன பண்ணுகிறோம் என்று தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருவரும் இறங்கி விட்டார்கள். அந்த வகையில் டியூஷன் எடுப்பதற்கு வீட்டிலிருந்து ராஜி மீனா கிளம்புகிறார்கள்.

தங்க மயிலுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த பாண்டியன்

அந்த வகையில் கோமதி இடம், ராஜி என்னுடைய படிப்பு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அதனால் நான் இப்பொழுதே கோச்சிங் கிளாஸ் சேர்ந்து அரசாங்க வேலைக்கு முயற்சி எடுக்கப் போகிறேன். அதற்கு மீனா அக்காவுக்கு தெரிந்த இடத்தில் ஃப்ரீ கோச்சிங் நடக்கிறது. அங்கே படிக்கப் போகிறேன் என்று கோமதியிடம் பொய் சொல்கிறார்.

கோமதியும் சரி என்று சொல்லிய நிலையில் தங்கமயில் வந்து இரண்டு பேரும் எங்கே போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ராஜி கோச்சிங் கிளாஸ் போறோம் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் எந்த இடத்தில் இருக்கிறது. எப்பொழுது வருவீர்கள் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

உடனே மீனா, தங்கமயிலின் வாயை அடைக்கும் விதமாக ஏன் அக்கா நீங்களும் வருகிறீர்களா? உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார். இதை கேட்டதும் தங்கமயில் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். ஏனென்றால் எந்தவித படிப்பும் இல்லாமல் அறிவும் இல்லாமல் இருக்கும் தங்கமயில் இந்த மாதிரி ஒரு விஷயம் எட்டாவது தூரத்தில் தான் இருக்கிறது.

அதனால் மீனா இந்த மாதிரி கூப்பிட்டதும் அடங்கிப்போன தங்கமயில், அடுப்பங்கரையில் எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார். உடனே மீனா, ராஜி வெளியே வந்து டியூஷன் எடுப்பதற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஏன் திடீரென்று தங்கமயில் அக்காவையும் நம்முடன் கூப்பிட்டீர்கள். அவர்களும் வந்துவிட்டால் நமக்கு தான பிரச்சனை என்று ராஜி கேட்கிறார்.

அதற்கு மீனா, எனக்கு அவங்களை பத்தி தெரியும். இந்த மாதிரி ஒரு விஷயத்தை வைத்து பேச்சை எடுத்தால் அவங்க கொஞ்சம் அடங்கி போகிறார்கள். அதனால் அவர் வாயை அடைப்பதற்காகத்தான் நான் சும்மா போட்டு வாங்கினேன் என்று மீனா ராஜிடம் சொல்கிறார். பிறகு ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனாவும் உதவி பண்ணுகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை பாண்டியனிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராஜி, மாமா நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியனும் நானும் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சொல்லிய நிலையில் ராஜி நீ என்ன சொல்ல வந்த அதை முதல்ல சொல்லு என்று சொல்கிறார்.

உடனே ராஜி, என்னுடைய படிப்பு முடிய போகிறது. அதனால் அரசாங்க வேலையில் சேர்வதற்காக இப்பொழுதே நான் கோச்சிங் கிளாஸ் போவதற்கு விசாரித்து வந்திருக்கிறேன். மீனா அக்கா போன அதே கோச்சிங் கிளாஸ் தான் ஃப்ரீயாக நடக்கிறது. நானும் போய் அங்கே படிக்கலாமா என்று பாண்டியனிடம் பொய் சொல்லி பெர்மிஷன் கேட்கிறார். உடனே பாண்டியனும் நல்ல விஷயம் தானே, நீ படி என்று ராஜிக்கு சம்மதம் கொடுத்து விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் சொல்லப்போகிற விஷயம் என்னவென்றால் செந்தில், கதிர் மற்றும் சரவணன் அனைவரும் மூன்று நாள் லீவு போட்டு பொண்டாட்டிகளை கூப்பிட்டு ஹனிமூன் போயிட்டு வாங்க என்று சொல்கிறார். இதை கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் இருக்கிறார்கள். அதைவிட சரவணன் முகத்திலும் ரொம்ப சந்தோசம் வர ஆரம்பித்து விட்டது.

ஆனால் ராஜி மற்றும் கதிர்க்கு மட்டும் ஏதோ ஒரு நெருடலான விஷயங்கள் இருப்பது போல் தெரிகிறது. இதையெல்லாம் விட தங்கமயில் இந்த விஷயத்தை கேட்டதும் அப்படியே ஆடிப் போய்விட்டார். ஏனென்றால் தனியாக போயி சரவணனை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குடும்பத்துடன் பிளான் பண்ணி இருந்தார். அது எதுவும் நடக்காது என்பதற்கு ஏற்ப அதிர்ச்சியில் நிற்கிறார்.

கடைசியில் கோமதி ஆசைப்பட்ட மாதிரி மூன்று மகன்களும் பொண்டாட்டிகளுடன் சந்தோஷமாக ஹனிமூன் போகப் போகிறார்கள். அத்துடன் ராஜி நினைத்தபடி பாண்டியனை ஓரங்கட்டி விட்டு மீனா உதவியுடன் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News