வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புருஷனுக்காக விபரீத முடிவை எடுக்கும் ராஜி.. பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் நொந்து போகும் கதிர்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பிடிக்காத வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாலும் கதிர் மீது தற்போது ராஜிக்கு பிரியம் வந்துவிட்டது. போதாக்குறைக்கு ராஜியோட அண்ணன் நகையே கேட்டு கதிரை அடித்ததால் மொத்த கோபத்தையும் ராஜிடம் காட்டி விட்டார். தன்னை கல்யாணம் பண்ணியதால் தான் கதிருக்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்ச்சில் ராஜி தவிக்கிறார்.

அதனால் எப்படியாவது திருட்டுப் பழியை போக்க வேண்டும் என்பதற்காக ராஜி அவர் தோழி மூலமாக கண்ணன் இருக்கும் வீட்டிற்கு போகிறார். ஆனால் கண்ணன் அங்கே இல்லை என்று தெரிந்ததும், என்ன ஆனாலும் பரவாயில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் இங்கே இருந்து அவனைப் பார்த்து நகையை வாங்காமல் வரமாட்டேன் என்று பிடிவாதமாக வாசலில் ராஜி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கண்ணன் அவருடைய நண்பர் வீட்டில் இருப்பதாக ராஜிக்கு தகவல் கிடைக்கிறது. உடனே ராஜி கொஞ்சம் கூட யோசிக்காமல் தோழியை கூட்டிட்டு கண்ணன் இருக்கும் இடத்திற்கு போகிறார். போனதும் கண்ணனின் நண்பர்களிடம் விசாரிக்கிறார். ஆனால் அவர்கள் கண்ணன் இங்கு இல்லை, துபாய்க்கு போவதாக சொன்னான் என்று சொல்லிவிட்டார்கள்.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

இதை கேட்டதும் ராஜி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எப்படி நான் அவனை கண்டுபிடித்து கதிரை காப்பாற்றுவேன் என்று தலையில் அடித்து புலம்புகிறார். அதே நேரத்தில் ராஜி காலேஜ் போயிட்டு இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை என்று கோமதி, வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அப்பொழுது பழனிச்சாமி எதற்கெடுத்தாலும் கதிர் அந்த பொண்ண திட்டிக்கொண்டே இருந்தால் எப்படி இருப்பாள்.

இன்று காலையில் காலேஜுக்கு போகும் போது கூட கதிர் திட்டினான் என்று சொல்கிறார். அத்துடன் இதனால் தான் அந்த பொண்ணு வீட்டிற்கு வரவில்லை என்று பயத்தில் ஒவ்வொருவரும் ராஜியை தேட ஆரம்பித்து விட்டார்கள். கதிரும் ராஜியைத் தேடிக் கொண்டு பைத்தியக்காரன் போல் அலைகிறார். அது மட்டும் இல்லாமல் இப்பொழுதுதான் கதிருக்கு ராஜி மீது புரிதல் ஏற்பட போகிறது.

இதனை தொடர்ந்து ராஜி வீட்டிற்கு திரும்பியதும் கதிர் மொத்த காதலையும் காட்டப் போகிறார். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் பார்த்த முல்லை மற்றும் கதிரின் ரொமான்ஸ் போல் இவர்களுக்கும் ஒரு ட்ராக் ஓடப் போகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் இந்த ஒரு நாடகம் தான் தற்போது சுவாரசியமாக மக்களை கவர்ந்து வருகிறது.

Also read: சின்ன பிள்ளைத்தனமாக விளையாடும் கோபி, அசிங்கப்படுவதே வேலையா போச்சு.. கெத்து காட்டும் பாக்கியா

Trending News