Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கும் விதமாக செந்தில் மற்றும் சரவணன் காணாமல் போன பெண்ணே கூட்டிட்டு வந்து விட்டார். இதனால் வீட்டிற்கு திரும்பிய கதிர், போலீஸிடம் அடி வாங்கியதால் ஓய்வு எடுக்கும்படி ரூம்குள் போய்விட்டார். இதனை தொடர்ந்து சரவணன் மற்றும் செந்திலும் கொஞ்சம் சோர்வாக இருப்பதால் ரெஸ்ட் தேவைப்படுகிறது.
ஆனால் பாண்டியன் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் வேலைக்கு போ என்று சரவணனை அனுப்பி வைத்துவிட்டு செந்திலுக்கும் கடை வேலையை கொடுத்துவிட்டார். இதனை பார்த்து மனசு கேட்காத மீனா, இன்னைக்கு ஒரு நாள் கடைக்கு லீவு விடலாமே என்று கேட்கிறார். அதற்கு குதர்க்கமாக பதில் அளிக்கும் விதமாக பாண்டியன் ஒரேடியாக கடையை இழுத்து மூடி விட்டு அனைவரும் வீட்டிலேயே இருப்போமா பரவாலையா என்று கேட்கிறார்.
உடனே மீனா மன்னிச்சிடுங்க மாமா என்று சொல்லி நானும் வேலைக்கு கிளம்பி விடுகிறேன் என்று போய்விடுகிறார். பிறகு ராஜி ரூம்குள் போனதும் கதிர் கீழே படுத்திருப்பதை பார்க்கிறார். உடனே கதிரை எழுப்பி மேலே வந்து கட்டிலில் படுக்க சொல்லுகிறார். அப்படி கதிர் கட்டிலில் படுக்கும் பொழுது முதுகில் இருக்கும் தழும்புகளை பார்த்து ராஜி அழுது பீல் பண்ணுகிறார்.
உடனே கதிர், அழாதே என்று சமாதானப்படுத்துகிறார். அந்த சமயத்தில் கோமதி உள்ளே வந்ததும் கோமதியும் அந்த தழும்புகளை பார்த்து மகன் வேதனைப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை திட்டி விடுகிறார். பிறகு கதிர் எனக்கு கொஞ்சம் தூங்கணும், தயவு செய்து தப்பா நினைக்காம கொஞ்சம் வெளியே இருங்க என்று அனுப்பி வைத்து விடுகிறார்.
அடுத்ததாக கதிர் நல்லா தூங்கி எழுந்ததும் வீட்டுக்குள் வருகிறார். அங்கே கதிர் பற்றிய விஷயங்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது. அதில் ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றும் விதமாக கதிர் பெயர் வெளிவந்து கதிருக்கு பாராட்டுக்கள் வர ஆரம்பித்துவிட்டது. இதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் நாம் அனைவரும் சேர்ந்து மொட்டை மாடியில் தூங்கலாமா என்று பழனிச்சாமி கேட்கிறார்.
பிறகு அனைவரும் மொட்டை மாடியில் தூங்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் பாண்டியன் மொட்டை மாடிக்கு சென்று கதிர் பக்கத்தில் அமர்ந்து மகனின் நிலைமையை பார்த்து கண்ணீர் வடிக்கும் அளவிற்கு வேதனை படுகிறார். இவ்வளவு பாசத்தையும் வெளிகாட்டாமல் மனசுகளை வைத்திருக்கும் பாண்டியனின் மனசை புரிந்து கொண்ட கதிர் அப்பாவை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்.