வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பாண்டியனின் ஆசை மருமகளுக்கு வேட்டுவைத்த ராஜி.. தம்பிகளிடமிருந்து சரவணனை பிரிக்க திட்டம் போடும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், கதிரிடம் படித்துக் கொண்டே நீ வேலையை பார்க்க ஆசைப்பட்டால் என்னுடன் கடைக்கு வந்து வேலையை பாரு. வெளியே போய் எங்கேயும் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிய நிலையில் கதிர் அதை மறுத்துவிட்டார். என்னால எல்லாம் உங்க கூட கடையில் வந்து வேலை பார்க்க முடியாது. உங்களுக்கு தருகிறேன் என்று சொன்ன பணத்தை நான் மாதம் மாதம் தந்து விடுவேன் என்று கதிர் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு கோபமான பாண்டியன், அனைவரும் நிற்கும்பொழுது கதிரை கன்னத்தில் பளார் என்று அடித்து விடுகிறார். அப்பொழுது கதிரின் நிலைமை பார்த்து கோமதி அழுது கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் ஆறுதலாக ராஜி, செந்தில், மற்றும் சரவணன் அனைவரும் நிற்கிறார்கள். அங்கே வந்த தங்கமயில், மாமா சொன்னது சரிதானே. அவர் இந்த குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்.

சரவணனிடம் சொக்குப்பொடி போடும் தங்கமயில்

அது புரியாமல் அவரை போய் எதிர்த்து பேசினால் கோபம் வரதான செய்யும். கதிர் தம்பி நீங்க பேசாம, மாமா சொன்னபடி கடையில் போய் வேலை பாருங்கள் என்று தங்கமயில் வழக்கம் போல் நாட்டாமை பண்ணுகிறார். இதைக் கேட்டதும் கோபமான ராஜி, அப்பா பிள்ளைக்குள் ஆயிரம் விஷயம் நடக்கும். அதுல நீங்க மூக்கை நுழைக்காமல் இருங்க.

என்ன பண்ணனும், ஏது பண்ணனும் என்று கதிர் முடிவு பண்ணட்டும். நீங்க இந்த விஷயத்தில் தலையிடாமல் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அதுதான் நல்லது என்று அனைவரது முன்னிலையிலும் தங்கமயிலை அடக்கி விட்டார். உடனே தங்கமயில், நான் இது என்னுடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து தான் பேசினேன். ஆனால் நான் பேசுவது தான் பெருசாகுது என்றால் இனி நான் தலையிடலை என்று சொல்லி ரூமுக்குள் போய்விட்டார்.

உடனே ரூம்குள் இருந்த தங்கமயில், இந்த ராஜி என்ன நம்மளை எதுவுமே பேசவிடாமல் தடுக்கிறார். இதற்கெல்லாம் இப்பொழுதே முடிவு கட்டணும் சரவணன் மாமா வரட்டும் பேசிக்கிறேன் என்று கோபத்துடன் புலம்புகிறார். உள்ளே வந்த சரவணனிடம் தங்கமயில் புலம்புகிறார். ஆனால் சரவணன் அதை ஏதும் கண்டு கொள்ளாமல் கதிர் ரொம்ப பாவம். அவனுக்கு ஆறுதலாக நான் ஏதாவது பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

வெளியே கவலையில் உட்கார்ந்த கதிரை, செந்தில் ஆறுதல் படுத்திய நிலையில் சரவணனும் வந்து சமாதானப்படுத்துகிறார். இப்படி மூவரும் பாசத்துடன் பேசிக் கொண்டிருப்பதை தங்கமயில் பார்க்கிறார். மாமா நம்மள பத்தி எதுவுமே கண்டுக்காமல் தம்பிகள் மீது மட்டும் பாசத்தை வைத்திருக்கிறாரே? இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக அம்மா சொன்னபடி மாமாவை தனியாக கூட்டிட்டு ஹனிமூன் போயிட்டு வந்தால் தான் சரியாகும் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி சரவணனிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி போவதற்கு ஏற்பாடு பண்ணி விடுவார். இதற்கிடையில் கதிர் படும் கஷ்டம் என்னால் தான் என்று கோமதி ஒரு பக்கம் இருந்து புலம்புகிறார். அங்கே வந்த மீனா, கோமதியை சமாதானப்படுத்துகிறார். அதற்கு கோமதி, கதிர் ராஜி கல்யாணம் எப்படி நடந்தது என்று எல்லா உண்மையும் நான் மாமாவிடம் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அப்பொழுது மீனா, அப்படி சொன்னால் இவ்வளவு நாள் என்னை ஏமாற்றினாய் என்று உங்கள தான் மாமா திட்டுவாங்க. அதுமட்டுமில்லாமல் ராஜியை பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தீர்களா என்று சொல்லி கோமதி வாயை அடைத்து விடுகிறார். இதை எல்லாம் தொடர்ந்து தங்கமயில் எப்படியாவது இந்த குடும்பத்திற்குள் இருக்கும் ஒற்றுமையே பிரித்து தனி குடித்தனம் போக வேண்டும் என்று அம்மாவுடன் சேர்ந்து சதி வேலையை பார்க்கப் போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News