சினிமாவில் இன்று உச்சத்திலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்ததில் இருந்தே தனக்கென ஒரு நிலையான இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார். சில படங்கள் நடித்த பின் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர் பட்டாளத்தையும் வளர்த்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால், நாம் ஏன் இவ்வாறு கஷ்டப்பட வேண்டும், இருக்கிறதே போதும் என்று சினிமாவை விட்டு விலகவும் நினைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தந்தை போன்றவர் தான் பாலச்சந்தர்.
ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ஒரு நிழலாக இருந்து சினிமாவில் வளர்த்து விட்டவர் பாலச்சந்தர். 1975ஆம் ஆண்டு பாலச்சந்தரின் “அவர்கள்” படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ரஜினி. அந்த படத்தில் இருந்தே இருவருக்கும் ஒரு தந்தை மகன் உறவு இருந்து வந்தது. ரஜினிகாந்த் மற்றவர்களை மாறி கொஞ்சம் சரளமாக பேசக்கூடிய மனிதர் கிடையாது.
ஆரம்பத்தில் டப்பிங்கில் பல மொழிகள் பேசுவதற்கு கூட கொஞ்சம் திணறி இருக்கிறார். ஓய்வில்லாமல், தூக்கமில்லாமல் பல காலம் தொடர்ந்து நடித்துள்ளார். இனிமேல் இப்படி நடிப்பது நம் உயிருக்கு ஆபத்து, மொழிப் பிரச்சனை வேறு இருக்கிறது என சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
இதனை தனது நண்பராகிய சிவக்குமாரிடம் கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் பாலச்சந்தர் காதுகளுக்கு எட்டியவுடன் ரஜினியை கூப்பிட்டு, உன்னை நான் வளர்ந்ததெல்லாம் வீனா போயிடும் போல, இப்பேர்பட்ட முடிவு யாரை கேட்டு எடுத்தாய் என திட்டியுள்ளார்.
தனது கஷ்டங்களை கூறிய ரஜினிக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாலச்சந்தர். முதலில் அப்படித்தான் இருக்கும் சினிமாவில் இதெல்லாம் சகஜம். இந்த முடிவை கைவிட்டு விடு, நீ வருங்காலத்தில் இந்த நாட்டையே வழிநடத்துவாய் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.