மலையாள சினிமா தான் நம்பர் ஒன்னாக திகழ்ந்து வருகிறது. சினிமா எடுக்கும் தரத்தில் அவர்கள் இன்று வரை முதலிடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மல்லுவுட்வின் மொத்த பெயரையும் எடுத்துள்ளது. இதனால் அங்கே பல நடிகர்கள் வெளியில் தலை காட்டாமல் பதுங்கி உள்ளனர்.
மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை பாலியல் ரீதியாக நடிகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பூகம்பமாய் கிளம்பி உள்ளது. நடிகர்கள் சித்திக், முகேஷ் மற்றும் ஜெயசூர்யா உட்பட பலபேர் மீது மீ டூ பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது போலீஸ் கம்ப்ளைன்ட் வரை சென்று எஃப் ஐ ஆர் பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் பேரதிர்ச்சியான நடிகர் சங்கத் தலைவரும், மாஸ் நடிகருமான மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ அவர்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று முதல் முதலாக மீ டூ பாலியல் புகாருக்கு எதிராக வாய் திறந்து உள்ளார்.
மலையாள திரையுலகின் பாலியல் புகாருக்கு எதிராக தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு “ஹேமா கமிட்டி” என்று பெயர் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்த குழு மூலம் விசாரணை வலையத்திற்கு உட்பட்டு வருகின்றனர்.
மேத்யூக்கு எதிரா வாய் திறக்காமல் எஸ்கேப்பான சூப்பர் ஸ்டார்
மலையாள சினிமா உலகில் எழுந்த புகாரை ஒட்டி மொத்த தமிழ் திரை உலகமும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த ஹேமா கமிட்டி விசாரணையை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் கேள்வி எழுப்பப்பட்டது, இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் ரஜினிகாந்த் எஸ்கேப் ஆகிவிட்டார்.
மோகன்லால் ரஜினியின் நெருங்கிய நண்பர். ஜெயிலர் படத்தில் ரஜினியின் நண்பன் மேத்யூ கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சூட்டிங் முடித்து விட்டு வந்த நடிகர் அர்ஜுனிடமும் இந்த கேள்வி எழுதப்பட்டது அவரும் விட்டால் போதும் என தலைதெரிக்க ஓடிவிட்டார் .
- கூலி படத்தில் ரஜினி, லோகேஷின் சம்பளம்
- குண்டக்க மண்டக்க கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த ரஜினி
- ரஜினிக்கு வயசானதால் சிக்கலில் மாட்டிய லோகேஷ்