செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

இந்திய சினிமாவுக்கே டஃப் கொடுக்க வரும் பாட்ஷா 2.. பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களின் வைரல் போஸ்டர்

Baasha 2: ஒரு சில படங்கள் காலம் கடந்தாலும் மாஸ் குறையாமல் இருக்கும். அப்படி ரசிகர்களால் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்பட்ட படம் தான் பாட்ஷா. சூப்பர் ஸ்டார் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த அப்படம் அந்தக் காலத்தில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கியது.

அதிலும் மாணிக் பாட்ஷா, மார்க் ஆண்டனியின் காம்போ இப்போது வரை யாராலும் ஈடுகட்ட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆட்டோக்காரராகவும், டானாகவும் சூப்பர் ஸ்டார் அசத்திய பாட்ஷா வெளிவந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை.

Also read: பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!

அப்படி அனைவரும் கொண்டாடிய இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு கேள்வியும் ரசிகர்களுக்கு பல வருடங்களாகவே இருக்கிறது. அதற்கு விடை அளிக்கும் வகையில் தற்போது ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.

அது யாரும் எதிர்பார்க்காத பல ரசிகர்கள் ஆசைப்பட்ட ஒரு காம்போவாக இருக்கிறது. அதாவது இந்த பாட்ஷா 2-வில் ரஜினியுடன் அஜித்தும் இருப்பது போல் அந்த போஸ்டர் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாட்ஷா 2 என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read: விடாமுயற்சி, தளபதி 68-ல் இருக்கும் ஒற்றுமையான விஷயங்கள்.. அட! ரிலீஸ் தேதியும் ஒன்னா?

மேலும் ஹாலிவுட் நடிகரும் வேண்டாம். பாலிவுட் நடிகரும் வேண்டாம். இந்த காம்போ மட்டும் இணைந்தால் வசூல் சாதனை வேற லெவலில் இருக்கும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா கூட இந்த வசூலை நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.

அப்படி ஒரு தரமான போஸ்டராக இது இருக்கிறது. ஏற்கனவே நெட்டிசன்கள் அஜித், ரஜினி இணைந்து இருக்கும் படியான பல போட்டோக்களை ரெடி செய்து வைரல் செய்து வந்தனர். அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ள பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களின் பாட்ஷா 2 போஸ்டர் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஃபேன் மேட் போஸ்டர்

batcha2-rajini
batcha2-rajini

Trending News