திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதியின் சூப்பர் ஸ்டார் கனவுக்கு செக் வைத்த ரஜினி.. ஜூன் மாத இறுதியில் தான் சம்பவமே இருக்கு

Actor Rajini: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிக்கு பிறகு, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் 72 வயதாகும் ரஜினி இப்போதும் எனர்ஜி குறையாமல் ஹீரோவாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த படம் நிச்சயம் தலைவரின் கம்பேக் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் இந்த மாத இறுதியில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதலில் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டது.

Also Read: காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க.. அரசியல் விதையை சாமர்த்தியமாக போட்ட விஜய்

இதற்கு விஜய் தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் தன்னுடைய 49-வது பிறந்த நாளை கொண்டாட போகிறார். அன்று அவருடைய லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான  ‘நான் ரெடி’ பாடல் வெளியாகுவதாக படக்குழு அப்டேட்  கொடுத்தது.

இந்த விஷயத்தைப் பற்றி தான் இப்போது ரசிகர்கள் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மாமன்னன் டிரைலரை விட லியோ ஃபர்ஸ்ட் சிங்கள் பற்றிய டாக் சோசியல் மீடியாவில் அதிகமாகிவிட்டது. இதனை உடைத்தெறிய வேண்டும் என்று ரஜினியின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கள் அப்டேட் வெளியாகி உள்ளது.

Also Read: முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 5 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

எனவே இந்த மாத இறுதியில் ஜூன் 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப் போவதாக படக்குழு அப்டேட் கொடுத்திருக்கிறது. இப்படி விஜய்யின் சூப்பர் ஸ்டார் கனவுக்கு செக் வைக்கும் விதமாக, ரஜினியும் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த பார்க்கிறார்.

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தை விட ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் மாஸ் காட்ட வேண்டும் என ரஜினி தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார். எது எப்படியோ தளபதியின் பிறந்தநாள் அன்று விஜய்யுடன் ரஜினியும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறார்.

Also Read: ரஜினியின் டயலாக்கை அட்ட காப்பி அடித்த தளபதி.. மாணவர்களின் முன்னிலையில் உடைந்த சஸ்பென்ஸ்

Trending News