Rajini Next project: மொத்த இளமையையும் மீட்டெடுத்தது போல் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் அடுத்தடுத்த சம்பவங்களை செய்து வருகிறார். இப்பொழுது 174 படத்தையும் கமிட் செய்து தரமான சம்பவம் செய்திருக்கிறார். தன்னை மிகவும் இளமையாக காட்டிய இயக்குனருக்கு அடுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
தற்சமயம் டிஜே ஞானவேலுடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் இளமைத்துள்ளலோடு நடிக்கிறாராம் ரஜினி. கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடத்தில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. போலீஸ் உயரதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ்கனகராஜ் இயக்கம் கூலி படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதுவும் ஜூலை மாதத்தில் சூட்டிங் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார்.
174 க்கு பழைய பாட்ஷாவா மாறும் ரஜினிகாந்த்
இப்பொழுது அடுத்த படத்தையும் கமிட் செய்து விட்டார்.73 வயதிலும் 30 வயது பாலகன் போல் படங்களில் நடித்து தள்ளுகிறார். அடுத்தபடியாக தன்னை வைத்து இயக்கிய பேட்டை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு 174 படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இப்பொழுது சூர்யாவை வைத்து அவர் நடிக்கும் 44வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த படத்தை முடித்து வருவதற்கும், ரஜினி கூலி படத்தை முடித்து வருவதற்கும் நேரம் சரியாக இருக்கும். பேட்டை படத்திற்கு பிறகு சுமார் ஐந்து வருடம் கழித்து இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள்.
- வயசானாலும் சீற்றம் குறையாத சிங்கமாய் ரஜினிகாந்த்
- லைக்காவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்
- பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்