திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பாவுக்கு அடுத்து செக் இவருக்குத்தான்.. ரஜினி மகளிடம் சிக்கி கொண்ட முக்கிய ஹீரோ

Rajinikanth: கோலிவுட் பொறுத்த வரைக்கும் 90 சதவீதம் நடிகர்கள் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்களாகத்தான் இருந்து சினிமாவுக்கு வந்திருப்பார்கள். இதில் பாதி பேருக்கு எப்படியாவது ரஜினி உடன் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். அப்படி ரஜினியின் தீவிர பக்தனாக இருக்கும் ஹீரோ ஒருவருக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் ஒரே மாதிரியான படங்களை கொடுத்தாலும் வசூலில் பாஸ் ஆகி கொண்டு இருந்த இந்த ஹீரோ சமீப காலமாக தொடர் தோல்வி படங்களை தான் கொடுத்து வந்தார். கிட்டத்தட்ட பீல்ட் அவுட் ஆகியிருக்க வேண்டிய இந்த ஹீரோவை ஒரு சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கை கொடுத்துக் காப்பாற்றினார் அந்த இயக்குனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த இயக்குனரும் ரஜினியின் தீவிர ரசிகர் தான்.

ரஜினியின் ரசிகர்களே சினிமாவில் பட்டையை கிளப்பும்போது அவரின் மகள்கள் நாங்கள் ஏன் ஜொலிக்க முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு அக்காவும் தங்கையுமாக ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள். எந்த துறையாக இருந்தாலும் சரி வாரிசுகளாக அப்பாவுக்கு செய்ய வேண்டிய பெரிய கடமை என்னவென்றால் அப்பா இருக்கும் துறையில் காலடி வைக்க கூடாது. அப்படி வைத்து விட்டால் 16 அடி எட்டி தான் பாய வேண்டுமே தவிர படுத்து விடக்கூடாது.

Also Read:ஜான் ஏறுனா முழம் சறுக்குது.. நிம்மதியை தேடி இமயமலைக்கு போகும் சூப்பர் ஸ்டார்

ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே இது இரண்டாவது ரகமாக மாறிவிட்டார்கள். சௌந்தர்யாவை நம்பி கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிக்கு பெரிய பண நஷ்டம் ஏற்பட்டு அதன் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலைமை கூட வந்தது. இது போதாது என்று மறுபடியும் படம் எடுக்கிறேன் என்று சொல்லி லால் சலாம் படத்திற்குள் அப்பாவைக் கொண்டு வந்து ஜெயிலர் படத்தின் மூலம் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் ஆகிவிட்டார் ஐஸ்.

அக்காவுக்கு படம் பண்ணினால் அடுத்து எனக்கும் படம் பண்ண வேண்டும் என்று சொல்லி இப்போது சௌந்தர்யா களத்தில் இறங்கி விட்டார். ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக புக் பண்ணி இருப்பது அவருடைய தீவிர சிஷ்யன் ராகவா லாரன்சை தான். ரஜினியுடன் எப்படியாவது ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்று நினைத்த ராகவா லாரன்ஸ் அவருக்கு வில்லனாக வேண்டும் என்று எப்போதுமே நினைத்தது கிடையாது.

ஆனால் தலைவரின் மகளின் ஆசையை கெடுத்து விடக் கூடாது என்று அரை மனதாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். லாரன்ஸுக்கு சில வருடங்கள் கழித்து இப்போதுதான் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு கருவேப்பிலை கொத்து மாதிரி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அமைந்தது. இது பொறுக்காத சௌந்தர்யா என் படத்தில் நடித்த ஆக வேண்டும் என அவரின் சோலியை முடிக்க திட்டமிட்டு விட்டார்.

Also Read:வேட்டையனில் ரெண்டு விஷயங்களை தோலுரித்த ரஜினி.. 15 நாளில் பூசணிக்காய் உடைக்கும் சூப்பர் ஸ்டார்

Trending News