வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிறந்தநாளுக்கு கூட செய்யாததை புத்தாண்டுக்கு செய்து காட்டிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்த அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இடமும் ரஜினி கதை கேட்டுள்ளார். இவ்வாறு ரஜினி அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக உள்ளார். இந்த சூழலில் சமீபத்தில் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவருடைய ரசிகர்கள் போயஸ் கார்டனில் ரஜினி வீடு முன் திரண்டனர்.

Also Read : ராகவேந்திரா சாமிக்கு பின் சூப்பர்ஸ்டார் மதிக்கும் சாமி இதுதான்.. வெளிப்படையாக மேடையில் பேசிய ரஜினி

அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தலைவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை ரஜினி ஏமாற்றி விட்டார். அதாவது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களிடம் தலைவர் இப்போது வீட்டில் இல்லை யாரும் இங்கு காத்திருக்க வேண்டாம் என்று கூறினார்.

இதனால் ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். ஆனால் தற்போது இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்கள் ரஜினியை சந்திக்க காத்திருந்தனர். பிறந்தநாள் அன்று நடந்தது போல இன்றும் ரஜினி வராமல் இருப்பாரோ என்ற எண்ணம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Also Read : சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறிவைக்கும் மாஸ் ஹீரோக்கள்.. ரஜினி என்ற ஒற்றை மனிதருக்கு இருக்கும் பவர்

மேலும் ரஜினியை பார்த்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது இணையத்தில் ரஜினி ரசிகர்களுக்கு புத்தாண்டு சொன்ன வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி உன் வாழ்க்கை உன் கையில் என்ற ரஜினியின் ஹேர் டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்து படக்குழு போஸ்டர் வெளியிட்டது. ஆகையால் விரைவில் படத்தைக் குறித்து வேறு ஒரு அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது.

Also Read : பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி

Trending News