புதன்கிழமை, மார்ச் 19, 2025

ஒரே ஒரு தோல்வி படம்.. 8 வருடமாக ஒதுக்கி வைத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் முதல் முறையாக உருவாக உள்ள படம் தலைவர்169. சமீபகாலமாக ரஜினி புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதே போல் அவர்களும் ரஜினி பெயரை காப்பாற்றி ஹிட் படங்களை கொடுக்கின்றனர்.

அதேபோல் ரஜினி தன்னுடைய காலா, கபாலி, பேட்ட போன்ற படங்களை இளவயது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொண்டிருந்தார். அதே போல் இந்த படங்களும் ரஜினியின் திரை வாழ்க்கையில் ஹிட் படங்களாக அமைந்தது. ரஜினிக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஒரு இயக்குனரை இன்றுவரை அழைக்காமல் உள்ளார்.

ரஜினியின் திரை வாழ்க்கைக்கு வித்தாக அமைந்த முத்து மற்றும் படையப்பா படங்களை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். இந்த இரு படங்களின் வெற்றிக்கு பிறகு ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் கமலஹாசன், சரத்குமார், அஜித், சூர்யா என பல நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையை பல வருடங்கள் கழித்து மீண்டும் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி கூட்டணியில் உருவான படம் லிங்கா. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டுகிறது. ஆனால் இப்படம் ரஜினியின் கேரியரில் மிக மோசமான தோல்வியை தந்தது.

மேலும் அதே ஆண்டு வெளியான கோச்சடையான் படத்திலும் கேஎஸ் ரவிக்குமார் கதை எழுதி இருந்தார். இப்படமும் சரியாக போகவில்லை. மேலும் லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தயாரிப்பாளர்களிடமிருந்து ரஜினிக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 8 வருடங்களாக கேஎஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ரஜினி அலைக்கழிக்கிறார்.

ரஜினிக்காக கேஎஸ் ரவிக்குமார் ஒரு நல்ல கதையையும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ரஜினி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதுமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதனால் கேஎஸ் ரவிக்குமார் தற்போது வேறு படங்களில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News