செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கெட்ட நேரம் சூழ்ந்ததால் படாத பாடுபடும் ரஜினி.. காரணம் என்னன்னு கேட்டா ஷாக்கா இருக்கு!

சூப்பர் ஸ்டாரை சுற்றி எங்கிருந்துதான் இத்தனை பிரச்சனைகள் வருமோ தெரியவில்லை. சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வருகிறார். சினிமா வாழ்க்கை ஒரு புறம் ஏற்ற இறக்கங்களோடு சென்று கொண்டிருந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் அவருக்கு சில மாதங்களாகவே உடல் நல பிரச்சனைகள் இருந்து வருகிறது. ஏற்கனவே அவருக்கு கிட்னி பிரச்சனை இருந்து சரி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது அவருக்கு ஏதாவது உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா திடீரென விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். திருமணமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் இப்படி ஒரு முடிவு எடுத்தது ரஜினியை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. அவர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் மகளின் அந்த முடிவை மட்டும் மாற்ற முடியவில்லை.

அவரின் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது தனுஷ் எப்போது போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தாரோ அதன் பிறகு தான் இத்தனை பிரச்சனைகளும் ஆரம்பித்ததாம்.

மேலும் தனுசுக்கு கூட அந்த இடம் ராசி இல்லை என்று பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் அவர் தன் மனைவியுடன் சேர்ந்து தான் அந்த இடத்திற்கு பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தார். ஆனால் வீடு கட்டி முடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.

தனிப்பட்ட வாழ்க்கை தான் இப்படி என்றால் தனுசுக்கு சினிமா வாழ்க்கையும் சிறப்பாக இல்லை. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அவருடைய படங்கள் சரியாக போகவில்லை. தமிழிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். இதையெல்லாம் பார்த்து தற்போது திரையுலகில் தனுஷ் போயஸ் கார்டனில் வாங்கிய இடத்தால்தான் இவ்வளவு பிரச்சனைகள் என்று பேசி வருகின்றனர்.

Trending News