புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மனிதம் காத்து மகிழ்வோம்.. ரஜினியை நெகிழ வைக்க ரசிகர்கள் செய்த சம்பவம்

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதிலும் இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கு கூட போட்டியாக தனது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுதும் சினிமாவில் பிஸியான நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதிலும் சினிமா துறையில் 45 வருடங்களாக தனது திரை பயணத்தில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஒரு விஷயத்திற்காக மட்டும் பல வருடங்களாக பிடி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் ரஜினிகாந்த். தற்பொழுது அதற்கான பச்சை கொடியை காட்டிய நிலையில் ரசிகர் மன்றம் சார்பில் பாராட்டு விழா வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Also Read: ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா நடிக்க மாட்டேன்.. அலப்பறை செய்த முன்னணி நடிகர்

அதில் ரஜினி ரசிகர்களின் குடும்பங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதில் மனிதம் காத்தும் மகிழ்வோம் என்ற நலத்திட்ட உதவியின் கீழ் பல்வேறு நல திட்டங்களை வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அன்பு உள்ளங்கள் கட்டித் தந்த அன்பு இல்லங்கள் என்று ரஜினி ரசிகர்மன்றம், சார்பில் வீடு இல்லாமல் வாழும் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்டி வழங்கியுள்ளனர். அதிலும் “ரஜினிகாந்த் அன்பு இல்லம்” என்ற பெயரிலேயே நலிந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ஒரே பாட்டால் பணக்காரங்களாக ஆன மாதிரி காட்டிய 5 படங்கள்.. அதிக அளவில் மோட்டிவேஷன் கொடுத்த ரஜினி

மேலும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வீடு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளனர். அதிலும் பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுய சம்பாதியத்தை ஈட்டுவதற்கு ஏதுவான எந்திரங்களான தையல் மெஷின், ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரம் போன்றவையும் வழங்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் மாணவர்களின் மேற்படிப்பிற்கான நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் போன்றவையும் இந்நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளர் ரவி அவர்கள் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் 6 படங்கள்.. இத்தனை நாட்களா என வாயை பிளக்க வைத்த சந்திரமுகி

Trending News