வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. சூப்பர் ஸ்டார் பரபரப்பாக பேசிய 5 மேடைகள்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. அவர் அரை மணி நேரம் பேசிய விஷயம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கும் மேலாக மொத்த மீடியாவையும் பேச வைத்திருக்கிறது. ரஜினிக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஐந்து மேடைகளில் இதே போன்ற பேசி பயங்கர ட்ரெண்டாகி இருக்கிறார்.

சந்திரமுகி இசை வெளியீட்டு விழா: 2003 ஆம் ஆண்டு ரஜினிக்கு பாபா திரைப்படம் படுதோல்வியை கொடுத்தது. 2 வருடங்கள் படங்களே இல்லாமல் இருந்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என போட்டி போடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அப்போது சூப்பர் ஸ்டார் சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவின் போது நான் யானை இல்லை விழுந்ததும் எழுந்திருக்காமல் இருக்க, நான் குதிரை என்று பேசி இருந்தார். அவர் பேச்சுக்கு ஏற்ப சந்திரமுகி திரைப்படம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

Also Read:முத்துவேல் பாண்டியனுக்காக ரெடியாகும் குட்டிக்கதை.. உங்களுக்கு சலச்சவன் நான் இல்ல என்ன முடிவு

காலா இசை வெளியீட்டு விழா: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா பட இசை வெளியீட்டு விழாவின் போது, நான் என்னை குதிரை என்று சொன்னேன். இந்த குதிரை என்ன ஓடிக்கொண்டே இருக்கிறது, 40 வயதில் நின்று விடும், 60 வயதில் நின்று விடும் என எல்லோரும் நினைத்தார்கள் ஆனால் நான் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறேன், அதை பார்க்கும் பொழுது எல்லோருக்கும் பொறாமையாக தான் இருக்கும், வயிறு எரியத்தான் செய்யும் என ரொம்ப நக்கலாக பேசி இருந்தார். அவர் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது.

தென்னிந்திய விருது வழங்கும் விழா: தென்னிந்திய சினிமாக்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் ரஜினியிடம் இந்த வயதிலும் நீங்கள் இப்படி நடனம் ஆடுவதற்கும், நடிப்பதற்கும் என்ன இன்ஸ்பிரேஷன் என்று கேட்டிருப்பார்கள். அதற்கு ரஜினி ரொம்பவும் வெளிப்படையாக எல்லாத்திற்கும் பணம்தான் காரணம், நடித்தால் பணம் கிடைக்கும் என்பதுதான் உண்மை என்று சொல்லி இருப்பார். அதன் பின்னர் சினிமா எனக்கு ரொம்பவும் பிடிக்கும், பிடித்த விஷயத்தை விரும்பி செய்கிறேன் என்று சொல்லி இருப்பார்.

Also Read:ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினி பேசியது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. மணிரத்தினத்தின் தளபதி திரைப்படத்தில் நடித்த தன்னுடைய அனுபவத்தை, ரசிகர்களின் முன்னிலையில் தன்னை தாழ்த்திக் கொண்டு அனைவரும் சிரிக்குமாறு நகைச்சுவை கலந்து பேசி இருந்தார்.

காப்பான் இசை வெளியீட்டு விழா: சூர்யாவின் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, அந்த நேரத்தில் சூர்யா, நீட் பரீட்சை பற்றி பேசி இருந்ததை சொல்லி, நீங்கள் பேசியது மத்திய அரசுக்கு கேட்டுவிட்டது. இப்போதைக்கு நல்ல படங்கள் நடியுங்கள், இதையெல்லாம் பேச காலம் இன்னும் நிறைய இருக்கிறது என நாசுக்காக அறிவுரை சொல்லி இருப்பார். மேலும் ரொம்பவும் வெளிப்படையாகவே சூர்யாவை முதல் படத்தில் பார்க்கும் பொழுது இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று நினைத்தேன் பின்னர் இவருடைய பல படங்களை பார்த்து நானே மிரண்டு விட்டேன் என்றும் பேசி இருப்பார்.

Also Read:40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

Trending News