வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு நடிகருக்கு வில்லன் வாய்ப்புக்கொடுத்த ரஜினி.. ரஜினி இல்லைனா இன்னைக்கு இவர் இல்ல

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றுவரை அவர் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் சரி, வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சரி தன்னால் முடிந்த உதவிகளை புரிபவர். அதிலும் முக்கியமாக கடனால் அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர்கள், மார்க்கெட்டில்லா நடிகர்கள் என பல பிரபலங்களை ரீ என்ட்ரி கொடுக்க வைத்தவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

இப்படிப்பட்ட குணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது ஆரம்பக்கால கேரியரில் இருந்தே வளர்ந்து வந்தது தான். அந்த வகையில் மார்க்கெட்டில்லா வாரிசு நடிகரை தன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்து அழகுப் பார்த்துள்ளார் ரஜினிகாந்த். 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் எஸ். முத்துராமன் இயக்கத்தில் வெளியான நல்லவனுக்கு நல்லவன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது.

Also Read: பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சூப்பர்ஸ்டார்.. யாரும் நஷ்டப்படாமல் அப்பவே ரஜினி செய்த பேருதவி

150 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடிய இப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்திருப்பார். அதே சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வினோத் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடித்து அசத்தியிருப்பார். இப்படம் ரஜினிகாந்தின் கேரியருக்கு எந்த அளவுக்கு முக்கியமாக அமைந்ததோ, அதேபோல தான் நடிகர் கார்திக்கிற்கும் இப்படம் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்தது.

அந்த வகையில் நடிகர் கார்த்திக் பல படங்களில் நடித்திருந்த சமயத்தில் திடீரென சில வருடங்கள் கதை சரியாக தேர்தெடுக்க தெரியாமல், இவரது பல படங்கள் பெரும் தோல்வியடைந்தது. என்னதான் இவர் இளசுகளின் மனதை கொள்ளையடித்தாலும் இவரது படங்கள் ஓடாததால் எந்த தயாரிப்பாளர்களும் கார்த்திக்கின் நடிப்பில் படம் தயாரிக்க முன்வரவில்லை.

Also Read: கார்த்திக்கிடம் சிக்கி சின்னாபின்னமான 5 இயக்குனர்கள்.. மொத்தமாய் பட்ட நாமம் போட்ட நவரச நாயகன்

இதனால் மனமுடைந்து வீட்டிலேயே முடங்கியிருந்த கார்த்திக்கை , ரஜினிகாந்த் மற்றும் ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றாக சந்தித்து அவரிடம் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வில்லனாக நடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக் என்னால் வில்லனாக நடிக்கவே முடியாது என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனர், சரவணன் கார்த்திக்கிடம் பேசியுள்ளார்.

அதில் நீங்கள் இப்படத்தில் வில்லனாக நடித்தால் உங்களது அடுத்தப்படத்தை நானே தயாரிக்கிறேன், நீங்கள் ஹீரோவாக நடியுங்கள் என கூறியுள்ளார். இதற்கு பின்பு சமாதானமான கார்த்திக் ரஜினி கேட்டதற்காக அரைமனதுடன் இப்படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் இப்படம் வெளியானவுடன் செம ஹிட்டான நிலையில், கார்த்திக் இப்படத்திற்கு பின்னர் சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

Also Read: ரெண்டு பொண்டாட்டி பத்தாது என காதலில் விழுந்த கார்த்திக்.. நம்பி ஏமாந்தால் தற்கொலை முயற்சியில் 80-களின் கனவுக்கன்னி

Trending News