Rajini and Vijay: பொதுவாக பெரிய படங்கள் ஏதாவது ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் பக்கத்திலேயே ஒரு சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகும். ஏனென்றால் ஒரு வேளை பெரிய படங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் உடனே அனைவரது கவனமும் சின்ன படத்தின் மீது திரும்பும். அதன் மூலம் வசூல் அளவில் சின்ன படங்கள் பெருத்த லாபத்தை அடைந்து விடும்.
இந்த ஒரு யுத்தி தான் சமீப காலமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினி மற்றும் விஜய் படங்கள் வருகிறது என்றால் அவர்கள் கூட யாரும் போட்டி போட விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் நடிக்கும் படங்கள் நல்லா இருக்கோ இல்லையோ, இவர்களுக்காகவே மக்கள் பார்க்கப் போவார்கள் என்பதால் தான். அந்த வகையில் ரஜினி நடித்த வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கோட் படத்தை வேட்டையாட தயாராகிய ரஜினி
அதே மாதிரி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படமும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்களும் ரிலீஸ் பண்ண முடியாது. அத்துடன் ரஜினியுடன் போட்டி போட முடியாது என்பதற்காக கங்குவா ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டார்கள். ஆனால் தற்போது வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தாலும், விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை.
இதற்கு இன்னும் கொஞ்சம் நாளாகும் அதனால் பொறுமையாகவே ரிலீஸ் பண்ணலாம் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா மற்றும் இயக்குனர் ஞானவேல் முடிவு எடுத்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினி அதெல்லாம் முடியாது விஜய்யின் கோட் படத்திற்கு பிறகு என்னுடைய படம் தான் ரிலீஸ் ஆகவேண்டும் என்று லைக்காவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆவதற்கு தயாராகிவிட்டது. இதனை அடுத்து தான் நடித்த வேட்டையன் படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு விஜய்க்கு மறைமுகமாக சவால் விடும் அளவிற்கு கோட்படத்தின் வசூலின் சாதனையை முறியடித்துக் காட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார் ரஜினி.
ஆனால் லைக்கா மற்றும் ஞானவேல் இருவரும் கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்கிறார்கள். அதற்கு அந்த பேச்சுக்கே இடமில்லை சொன்னபடி எந்தவித மாற்றமும் இல்லாமல் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று பிடிவாதமாக மொத்த டீமுக்கும் ரஜினி ஆர்டர் போட்டுவிட்டார்.
அதற்கு காரணம் கடந்த வருடம் லியோ மற்றும் ஜெயிலர் படங்கள் போட்டி போட்டு அடுத்தடுத்து வந்த நிலையில் லியோவை விட ஜெயிலர் ஒரு படி முன்னுக்கு வந்து விட்டது. அதே மாதிரி கோட் படத்தை விட வேட்டையன் படம் வசூல் அளவில் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி இந்த மாதிரியான விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்.
ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் வசூல் ரீதியாக தோற்று போய் இருக்கும் லைக்கா, அடுத்தடுத்து படத்தின் மூலம் நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சியும், ரஜினியின் வேட்டையின் படம் தான் அவரை தூக்கி நிறுத்தும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்குள் ரஜினி, விஜய் உடன் போட்டி போட வேண்டும் என்பதால் அவசரப்பட்டு வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்வதால் கொஞ்சம் கதி கலங்கி போய் நிற்கிறார்.