Rajini: கிட்டத்தட்ட 49 வருடங்களுக்கு மேல் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக பயணித்துக் வரக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதிலும் 73 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படு மாஸாக நடித்து வசூல் அளவில் சாதனை புரிந்து வருகிறார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் புகைப்படம்
இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்திலும் கமிட்டாக இருக்கிறார். இதில் இவருக்கு நண்பராக சத்யராஜ் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. ஆனால் அதற்குள் வருடத்தில் ஒருமுறை போக வேண்டிய இமயமலை பயணத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
மன அமைதியை தேடி சென்ற ரஜினி
அந்த வகையில் தற்போது இமயமலை புறப்பட்டு சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த செய்தியாளர்கள் வேட்டையன் படப்பிடிப்பை பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு படப்பிடிப்பு நன்றாக முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு பயணிப்பதை பற்றி கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
அதற்கு ரஜினி ஒவ்வொரு வருடமும் போகிற கேதர்நாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்லுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அரசியலைப் பற்றி கேள்வி கேட்கும் விதமாக மோடி இந்த ஆண்டு வெற்றி பெறுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ரஜினி அரசியல் சம்பந்தமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அடுத்ததாக தற்போது இசையா? கவிதையா? என்ற போட்டிகள் அதிகரித்து வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரஜினி கையெடுத்து கும்பிட்டு அண்ணா நோ கமெண்ட்ஸ் என்று பதிலை கொடுத்திருக்கிறார். எப்படியாவது ரஜினி வாயிலிருந்து ஏதாவது ஒரு வார்த்தை வர வைத்து அதன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று நினைத்த செய்தியாளர்களுக்கு சரியான பதில் கொடுத்து இருக்கிறார்.
ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்தவுடன் கூலி படத்தின் படபிடிப்பில் ரொம்பவே பிஸியாகி விடுவார். அதனால் நடித்து முடித்த வேட்டையன் படத்திற்கும், இப்போ இருக்க கூலி படத்தின் படப்பிடிப்பு நன்றாக அமைய வேண்டும் என்பதற்கும் மன அமைதியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இமயமலைக்கு சென்று இருக்கிறார்.
ரஜினி மீது திணிக்கப்பட்ட சர்ச்சை
- அரசியலில் ஒதுங்கியதால் தொழில் பக்தியா
- பாரதிராஜா, ரஜினிக்கும் நடுவே வந்த கைகலப்பு
- ரஜினிக்கு எண்டே இல்ல , சுடசுட வெளியான அப்டேட்