ரஜினியிடம் சரக்கு தீர்ந்தது இனிமேல் அவர் இருக்கிற இடத்தை மட்டும் காப்பாற்றி கொண்டாலே போதும் என மொத்த கோடம்பாக்கமும் பேச தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல் ரஜினியும் தொடர் தோல்விகளால் தன்னை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும் விநியோதர்களுக்கும், படம் ஓடாததால் நஷ்ட ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படி ரஜினி நஷ்டத்திற்கு பொறுப்பேற்ற 5 படங்கள்
குசேலன்: 2007ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான கதா பறையூம் போல் படத்தின் ரீமேக் தான் குசேலன். மலையாளத்தில் ஹிட் அடித்ததால் நம்பி எடுக்கப்பட்டது. ஆனால் படம் ப்ளாப்பானது. இதனால் ரஜினி தன்னால் நஷ்டப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்து சமாளித்தார்.
கோச்சடையான்: ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை டைரக்ட் செய்தார். இந்த படம் அனிமேஷன் மூவியாக வெளிவந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனாலும் ரஜினிகாந்த் மிகுந்த துயரம் அடைந்தார்.
லிங்கா: எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும் என பெரிதும் நம்பி கே எஸ் ரவிக்குமாரிடம் ரஜினி அந்த பொறுப்பை கொடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார் பின்னர் ரஜினி தான் அதை சரி செய்தார்.
தர்பார்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்திற்காக இன்று வரை ரஜினி பல பேரை சமாளித்து வருகிறார். இப்பொழுது கூட வேட்டையன் படத்திற்கு பழைய பஞ்சாயத்தை கொண்டு வந்தனர். தர்பார் படம் சரியாக போகாததால் அந்த காசுக்கு ஈடுகெட்ட வேட்டையன் படத்திற்கு பிரச்சனை செய்தனர்.
அண்ணாத்த: சிறுத்தை சிவா இயக்கிய இந்த படமும் சரியாக போகவில்லை இப்படி தொடர் தோல்விகளால் ரஜினி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார்.இந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தையும் ரஜினி சரி செய்தார்.