திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்

தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர் தான் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

சிறைப்பறவை: 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் விஜயகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

என் புருஷன் எனக்கு மட்டும்தான்: மனோபாலா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள். இப்படம் குடும்பத்தில் நடக்கக்கூடிய கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் இவரது குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருக்கும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மல்லுவேட்டி மைனர்: 1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் ஷோபனா சிறையில் இருந்து விடுதலையாகி இவரின் கடந்த காலத்தை நினைவு கூறுவதில் இருந்து இந்த கதை தொடங்கும்.

பிள்ளை நிலா: மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், ராதிகா, ஜெய்சங்கர், நளினி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் திகில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

முற்றுகை: 1993 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அருண் பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா ஆகியோர் நடித்தார்கள். இதில் அருண் பாண்டியன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியாக சிறையில் இருப்பார். பின்பு சிறையில் இருந்து தப்பி செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கப்படும். இப்படத்திற்கு சித்தார்த்தா இசையமைத்திருக்கிறார்.

Trending News