ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

28 வருடம் கழித்து ஒன்று சேர ஆசைப்படும் ரஜினி.. வசமாகச் செக் வைத்து அனுப்பிய குருசாமி

தமிழ் சினிமாவில் எவரும் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் ரஜினிகாந்த். இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் அவருக்கான மார்க்கெட்டையும் கொஞ்சம் கூட சரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

குடும்ப பிரச்சனை அவரை சங்கடப்படுத்தினாலும், திரைத்துறையில் எப்போதும் அவர் பின்வாங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று சினிமா ரசிகர்கள் மீது அதிகமாக் இருந்தது.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் அவருக்கு விமர்சன ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியாக பார்க்கப்படுகிறது. மீண்டும் சிறுத்தை சிவாதான் ரஜினியை இயக்க போகிறார் என்றும், தேசிங்கு பெரிய சாமி கதையோடு தயாராக இருக்கிறார்.

ரஜினி ஓகே சொன்னால் ஷூட்டிங் கிளம்பி விடலாம் என்றும் பல செய்திகள் உலா வந்தது. இப்படி பல செய்திகள் வந்தாலும் அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கு மத்தியில் இசைஞானி இளையராஜா ரஜினிகாந்த் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.

அவர்கள் எப்போதும் நண்பர்கள் போல பேசிக்கொள்வார்கள் என்று அனைவர்க்கும் தெரியும். அந்த சந்திப்பின்போது, “என்ன சாமி? நம்ம ஒரு படம் பண்ணலாமா? என்று இளையராஜா கேட்டு இருக்கிறார். அதற்கு சரி சாமி நீங்கள் சொன்னால் சரி என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இளையராஜாவின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது. வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் அதிகமாக இருக்கும்.

கடைசியாக 1994-ல் வெளியான வீரா திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இருபத்தி எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் இணைய இருக்கிறன்றனர். ஆனால் இந்தப் படத்தில் இளையராஜா ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டிருப்பதால் ரஜினிகாந்தின் படங்களில் மிக முக்கிய படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending News