ரஜினிகாந்த் கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடித்து வந்தார். ஏற்கனவே முதல் கட்டத்தில் ரஜினி இல்லாத காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கிவிட்டார். இந்த ஷெட்யூல் முடிந்த பிறகு 10 நாள் இடைவேளைக்குப் பிறகு அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்க இருந்தது.
இதற்கிடையில் தொடர் சூட்டிங் பலு காரணமாக ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிகாந்த்திற்கு பேக் பெயின் வந்துள்ளது. தொடர்ந்து வலி அதிகரிக்கவே சுதாரித்துக் கொண்ட ரஜினி மருத்துவமனை சென்றுள்ளார்.
ரஜினியை பரிசோதித்த டாக்டர்கள் இது தொடர்ந்து நடிப்பதால் அழுத்தம் காரணமாக வந்த பேக் பெயின் என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். ரஜினிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்ததால் அவருக்கு இதய அடைப்பிற்கு ஸ்டண்ட் வைத்துள்ளனர்.
கூலியால் எமனை பார்த்த அமிதாப் பச்சன்
இதன் காரணமாக வேட்டையன் பட சூட்டிங் தள்ளிப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து அவரது 40 வருட கால நண்பர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்து வருகிறார். அவரும் 1982 ஆம் ஆண்டு கூலி என்ற ஒரு படத்தின் நடித்துள்ளார்.
அமிதாப்பச்சன் நடித்த கூலி படத்தில் அவருக்கு மிகப்பெரிய ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் வயிற்றில் கூர்மையான கண்ணாடி போன்ற ஒரு ஆயுதம் குத்தி யுள்ளது. இதனால் அவர் உயிர் பிழைப்பாரா மாட்டாரா என்ற அளவில் அவரது நிலைமை இருந்தது. மருத்துவர்கள் அவர் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கவில்லை. அப்படி ஒரு அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் அமிதாபச்சன்.
- தலைவரின் நிலைக்கு லோகேஷ் தான் காரணமா.?
- மனவேதனையில் குமுறும் லோகேஷ்
- கட்டப்பாவுக்கு லோகேஷ் கொடுத்த கேரக்டர்