ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹுக்கும் பாடலைக் கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ரஜினி.. இவ்வளவு சர்ச்சை போயிட்டு இருக்கு இப்படி சொல்லிட்டாரே!

Jailer Rajini: இப்போது இணையத்தையே அலறடித்துக் கொண்டிருக்கும் பாடல் தான் ஹுக்கும் பாடல். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது ஜெயிலர் படம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி இருந்தது.

தமன்னாவின் குத்தாட்டத்துடன் வெளியான இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்ததாக செகண்ட் சிங்கிளாக ஹுக்கும் பாடல் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. விஜய், ரஜினியை வைத்து குளிர் காயும் அனிருத்

அதாவது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் தான் ஆசைப்படுகிறார் அவரை தும்சம் செய்யும் விதமாக இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளதாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுவே இந்த பாடலை இன்னும் ரசிகர்கள் பார்க்க ஆர்வத்தை தூண்டியது. இப்போது இந்த பாடல் வரிகளை எழுதிய சுப்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அவர் ரஜினியின் தீவிர ரசிகராம். ஒரு நாள் அனிருத் வாய்ஸ் நோட் ஒன்று அனுப்பி உள்ளார். பாடல் சம்பந்தமாக தான் அனுப்பி இருக்கிறார் என்று பார்க்கும்போது தனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது இந்த பாடல் உருவானபோது அதைக் கேட்டு விட்டு ரஜினி வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தாராம்.

Also Read : நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

சுப்பு இந்த பாடல் அருமையாக இருக்கிறது கண்டிப்பாக ரசிகர்கள் இதைக் கொண்டாடுவார்கள் என்று ரஜினி கூறியிருந்தாராம். இதைக் கேட்டு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆக இருந்ததாக தெரிவித்திருந்தார். ரஜினி அப்போது சொன்னது போலவே இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

மேலும் ரஜினியை ஒருமுறையாவது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஏதாவது ஒரு விஷயம் செய்வேன் என்று சுப்பு கூறியிருக்கிறார். கண்டிப்பாக வரும் காலத்தில் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சுப்பு தெரிவித்திருக்கிறார்.

Also Read : கவர்ச்சி நடிகையுடன் தொடர்பில் இருந்த ரஜினி.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

Trending News