வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பல பாடலை வைத்து ரஜினிக்கே ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்.. வாய்ப்பை வாரி கொடுத்த தலைவர்

பொதுவாக சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்றாலே அவருடைய அறிமுக பாட்டு செம கலக்கலாக அவருடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் மாஸாக இருக்கும். அப்படி எத்தனையோ பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் கபாலி படத்தில் வந்த நெருப்புடா பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது.

ரஜினிகாந்தின் வித்தியாசமான நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய திரைப்படம் கபாலி. ரஜினி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்டில் வெளுத்து வாங்கிய இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நெருப்பு டா நெருங்கு டா பார்ப்போம் என்ற பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ்.

அவர் இந்தப் பாடலை ரஜினிக்காக மிகவும் ஸ்பெஷலாக எழுதியிருந்தார். ஒரு பாடகரான அவர் ராப் கலந்த எழுச்சி மிகுந்த பாடல்களை எழுதுவதில் திறமையானவர். இப்படி இவர் எழுதிய கபாலி திரைப்படத்தின் அந்த பாடல் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஒரு வகையில் இந்தப் பாடல் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது.

மேலும் இந்தப் பாடல் வரிகள் ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதன் காரணமாகவே அவர் தன்னுடைய அடுத்த படமான காலா திரைப்படத்திலும் அருண் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் அருண்ராஜா தங்க செல உட்பட மூன்று பாடல்களை எழுதியிருந்தார்.

கபாலி திரைப்படம் போலவே இந்த படத்தின் பாடல்களும் அனைவரையும் கவர்ந்தது. இதனால் ரஜினி மீண்டும் தன்னுடைய அடுத்த படமான தர்பார் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் அருண்ராஜா கண்ணுல திமிரு என்ற பாடலை எழுதி இருந்தார்.

தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும் படத்தின் பாடல்கள் அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்தது. இப்படி ரஜினி தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அருண் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு முக்கிய காரணம் அவருடைய திறமைதான். அந்தத் திறமைதான் அவரை தற்போது ஒரு இயக்குனராகவும் உருவாக்கியுள்ளது.

Trending News