புதன்கிழமை, ஜனவரி 8, 2025

12 ஏக்கர் நிலத்தை பதிவு செய்து தியாகம் செய்த ரஜினி.. அரசியல் கட்சிகளை வாயடைக்க வைத்த சம்பவம்

“என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா! என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா!” என்று சொன்ன வார்த்தையை காப்பாற்றி உள்ளார் ரஜினிகாந்த். தமிழக மக்களால் தலைவர் என்றும் அன்பாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனிப் பெரும் ஆளுமை ஆவார். 

கே பாலச்சந்தர் மூலமாக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டு தனது  கடின உழைப்பின் மூலம் உச்சத்தை தொட்டு டாப் ஒன் நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் ரஜினி தற்போது  ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் நடித்து வருகிறார். 

வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்று இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து தனது ஸ்டைலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொண்டாட வைத்திருக்கும் ரஜினி, அரசியலில் குதித்து மக்களுக்கு சேவை செய்ய காத்திருந்தார். இறுதியில் தன் உடல் நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிப்பதிலிருந்து பின் வாங்கினார். 

Also read :ரஜினியின் வெற்றி ரகசியத்தை பின்பற்றும் அஜித்.. பூரித்துப்போய் தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்

 தொடர்ந்து சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் பொது வாழ்வில் சர்ச்சைகள் என பலவற்றை சந்தித்த தலைவர் தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த சேவையை ஆற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதை நிறைவேற்றும் பொருட்டு சமீபத்தில் சென்னையில் 12 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கி அதில் பிரம்மாண்டமாக மருத்துவமனை கட்ட முடிவெடுத்துள்ளார். 

ராகவேந்திரா சுவாமிகளின் தீவிர பக்தரான சூப்பர் ஸ்டார், ராகவேந்திரர் பெயரில் கல்யாண மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறார் தற்போது OMR சாலையில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்கள் குறைந்த கட்டணத்தில் உயர்தரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்ட உள்ளதாகவும், வசதியானவர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும் உறுதிமொழி கொடுத்து உள்ளார். 

தற்போது ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் தனது நண்பர் ஒருவரின் மேற்பார்வையில் மருத்துவமனையை கட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார். பேரிடர் சமயங்களில் மட்டுமே உதவிக்கரம் நீட்டிய தலைவர் இன்று தமிழக மக்களுக்காக  மருத்துவமனை கட்டி தன் மனித நேயத்தை வெளிப்படுத்தி “தலைவர் ஒருவர் தான், அவர் சூப்பர் ஸ்டார் தான்” என்பதை நிரூபித்து உள்ளார்

Also read: ஸ்டைலே இல்லாமல் ரஜினியின் மறக்க முடியாத 5 படங்கள்.. தம்பி தங்கைக்காக ஓடாய் தேய்ந்த சூப்பர் ஸ்டார்

Trending News