ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என் புருஷன வச்சு கல்லா கட்டலாம்னு பாக்குறியா.? அக்கா தங்கச்சி சண்டையால் நிம்மதியை தொலைத்து வரும் ரஜினி

Rajini is struggling with two daughter without peace: சினிமாவில் ரஜினி, என்ன தான் சூப்பர் ஸ்டார் என்று கெத்துடன் சுற்றி வந்தாலும் பெற்ற இரு பிள்ளைகளால் நிம்மதியை தொலைத்து தான் வருகிறார். பொதுவாக பெற்றோர்களுக்கு தன் பெற்ற பிள்ளைகள் சந்தோசமாக இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது ரஜினிகாந்த் விஷயத்தில் இல்லாமல் போய்விட்டது என்று சினிமா விமர்சகர் பயில்வான் கூறியிருக்கிறார்.

அதாவது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் இவரின் கணவரான விசாகன், பிசினஸில் கவனம் செலுத்தி தொழிலதிபராக இருக்கிறார். ஆனால் இவருக்கு இன்னொரு ஆசை என்னவென்றால் சினிமாவில் நடித்து இவருடைய முகத்தை காட்டி விட வேண்டும் என்றுதான்.

இதனால் இவருக்கு தெரிந்த இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது குடும்பத்தில் நான் மட்டும் நடித்தால் போதும் என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தங்கையின் கணவரிடம் பேசி உங்களை வைத்து நான் படம் பண்ணுகிறேன் என்று ஆசையை தூண்டி விட்டிருக்கிறார்.

Also read: ஹவுஸ்ஃபுல் ஆகாத ரஜினியின் ஒரே படம்.. எழுந்த பின்னும் மீண்டும் கீழே விழுந்த சூப்பர் ஸ்டார்

இது பிடிக்காத சௌந்தர்யா, கடுப்பில் ஐஸ்வர்யாவிடம் நீ உன் வேலையை மட்டும் பாரு. அவரை வைத்து நீ கல்லா கட்ட வேண்டும் என்று நினைக்காத. என் புருஷன் ஆசைப்பட்டால் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும். நீ என் குடும்பத்திற்குள் புகுந்து உன்னுடைய இயக்குனர் புத்தியை காட்ட வேண்டாம் என்று வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிறார்.

அப்பாவை வைத்து படம் எடுத்ததே இப்பொழுது அல்லோளப்பட்டு இருக்கிறது. இதுல வேற என் புருஷன் கிட்ட வந்துட்டியா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி, இது என்னடா நமக்கு பெரிய தலைவலியா ஆகிவிட்டது என்று நினைத்து அக்கா தங்கச்சி சண்டையை தீர்த்து வைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

இதுவே ஐஸ்வர்யா அவருடைய கணவர் பக்கத்தில் இருந்திருந்தால் இந்த ஏச்சுக்களும்,பேச்சுக்களும் வந்திருக்குமா? இதற்கிடையில் ரஜினி தான் பாவம், பெற்ற இரு மகள்களின் சண்டையில் மாட்டிக் கொண்டு நிம்மதியை தொலைத்து வருகிறார். இனி ஐஸ்வர்யாவுக்கு எதிராக சௌந்தர்யா அவருடைய கணவரை வைத்து ஆடப் போகிறார் என்று சினிமா விமர்சகர் பயில்வான் கூறியிருக்கிறார்.

Also read: 90களில் சூப்பர் ஸ்டாரை வெறுத்த சக நடிகர்கள்.. ரஜினி போன் பண்ணியும் எடுக்காமல் செய்த துரோகம்

Trending News