திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி படம் பிளாப் ஆனதற்கு பார்ட்டி வைத்து கொண்டாடிய டாப் ஹீரோ.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

கோலிவுட்டில் ஜாம்பவானாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் இளம் ஹீரோக்களையும் பொறாமைப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தின் தோல்வியை முன்னணி ஹீரோ பார்ட்டி வைத்து கொண்டாடியதாக கிசுகிசுக்கப்பட்டது.

அந்த தகவல் உண்மையா? பொய்யா? என்பதை பிரபல இயக்குனர் உடைத்துக் கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை பெற்ற படமானது. ரஜினியின் படம் பிளாப் ஆன சமயத்தில் தளபதி விஜய் எல்லாருக்கும் பார்ட்டி கொடுத்ததாக சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்

தான் நடிக்கும் படங்களிலும் விழாக்களிலும் தன்னை சூப்பர் ஸ்டாரின் ரசிகர் என வெளிப்படையாக சொல்லக் கூடிய விஜய், பாபா படம் பிளாப் ஆனபோது பார்ட்டி கொடுத்தார் என்ற செய்தி உண்மைதானா என்பதை இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் உடைத்துக் கூறியுள்ளார்.

திரைப்பட உலகில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். அப்படி இருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாபா படம் பிளாப் ஆனபோது, அதற்கு விஜய் பார்ட்டி வைத்தார் என்பது ஒரு அபத்தமான செய்தி. மேலும் விஜய் ஒருபோதும் ரஜினியை தனது போட்டியாளராக பார்த்ததில்லை.

Also Read: நடிக்க முடியாமல் போன ரஜினி, நஷ்டத்தை ஈடு கட்டிய பெரிய மனுஷன்.. இப்பவும் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்

அப்படி இருக்கும்போது அவருடைய பட தோல்வியை எப்படி பிளாப் வைத்து கொண்டாடி இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி மீது விஜய்க்கு தனிப்பட்ட மதிப்பு மரியாதை இருக்கும்போது அவர் நிச்சயம் இதுபோன்று செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சித்ரா லட்சுமணன் அடித்து கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பரப்பப்படும் இந்த வதந்திக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் தவறாக பரப்பப்படும் இந்த வதந்திக்கு சித்ரா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Also Read: குருவுடன் ரஜினி கொண்டாடும் ஹோலி பண்டிகை.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

Trending News