Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இருங்க பாய்.. அடுத்து சம்பவம் செய்ய காத்திருக்கும் சூப்பர்ஸ்டார்

இருங்க பாய்.. அடுத்து சம்பவம் செய்ய காத்திருக்கும் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் கோட் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 450 கோடிக்கு மேல் படம் வசூல் செய்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்து யாருடன் […]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் கோட் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 450 கோடிக்கு மேல் படம் வசூல் செய்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்து யாருடன் கூட்டணி போடுவார் என்ற எதிர்பார்ப்பு அதீதமாக உள்ளது.

‘சென்னை 28, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சரோஜா, கோவா, மாநாடு, மங்காத்தா, கோட்’ உள்ளிட்ட பல படங்களை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அஜித், விஜய் இருவரையும் இயக்கியதைப் போலவே இருவரின் படங்களில் நடித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு. சமுத்திரக்கனி இயக்கிய `உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் வெங்கட் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். பயணங்கள் முடிவதில்லை, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில் நேற்று படத்தின் வெற்றிவிழாவும் கொண்டாட பட்டது. மேலும் கோட் படம் நன்றாக இருக்கிறது என்று சூப்பர்ஸ்டாரும் வெங்கட் பிரபுவை வாழ்த்தியுள்ளார்.

இணையப்போகும் மாஸ் இயக்குனர்.. கரைக்கு வருமா லைக்கா

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் வதந்தி, அவர்கள் சந்தித்தே பல மாதங்கள் ஆகிறது என்றும் தகவல்கள் வெளிவருகிறது.

இதை தொடர்ந்து, இந்த நிலையில், கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் ரஜினியைச் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கடுத்து, ரஜினி கால் சீட் கொடுக்கும்போது, படத்தை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே லைக்கா நிறுவனம் அதலபாதாளத்தில் இருக்கிறது. நிறுவனத்தை, வெங்கட் பிரபுவாவது, அந்த நிறுவனத்தை மீட்டு கரைக்கு கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.