Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரு காலத்தில் நிம்மதியை தொலைத்து பித்து பிடித்து அலைந்த ரஜினி.. வீட்டையே ரணகளமாக்கி சர்ச்சை

ஒரு காலத்தில் நிம்மதியை தொலைத்து பித்து பிடித்து அலைந்த ரஜினி.. வீட்டையே ரணகளமாக்கி சர்ச்சை

நிம்மதியை தொலைத்து ரஜினி செய்த காரியம்.

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். 72 வயதிலும் ஓய்வின்றி படங்களில் நடித்து வரும் ரஜினி தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறார். இந்த வெற்றி சாதாரணமாக ரஜினிக்கு கிடைத்து விட்டதாக பலர் கருதலாம்.

ஏனென்றால் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி பாலச்சந்தர் கண்ணில் பட்டதால் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி உலக நாயகன் கமலை போல இவர் தன்னுடைய படங்களுக்காக பல விஷயங்களை மெனகெடவும் மாட்டார். ஆனாலும் இப்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு தான் இருக்கிறது.

ஆகையால் இது எளிதில் கிடைத்து விட்டது என்று நினைத்தாலும் ரஜினி நினைத்த வாழ்க்கை வேறு தான். அதாவது கையில் கொஞ்சம் பணம், 3 வேளை நல்ல அசைவ சாப்பாடு, நினைத்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதுதான். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவுக்கு வந்த நேரத்தில் தமிழ் மொழி அவருக்கு சரியாக தெரியாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் சினிமாவை விட்டு போகலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதிலிருந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது வெளியில் ரஜினியால் செல்ல முடியவில்லை. ரசிகர்கள் எப்போதுமே அவரை சூழ்ந்து கொள்வதால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நிம்மதியை தொலைத்து பித்து பிடித்தவர் போல் மாறிய ரஜினி வீட்டையே தலைகீழாக மாற்றி விட்டாராம். வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் அடித்து தும்சம் செய்து இருக்கிறார். இதைப் பார்த்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பயந்து போய்விட்டாராம். இதனால் உடனடியாக ரஜினியின் குருநாதரான பாலச்சந்தருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

அதன் பிறகு பாலச்சந்தர் ரஜினியை அமைதியாக்கி பல விஷயங்களை கூறியிருக்கிறார். உனக்கு வாய்ப்பு தானாக வந்தது. அதேபோல் புகழும் உன்னை சூழ்ந்து கொண்டது. சிலர் இந்த புகழுக்காக எவ்வளவு அலைகிறார்கள் என்று தெரியுமா சரியாக இதை பயன்படுத்திக் கொள் என்று சொன்ன பிறகு ரஜினி அமைதி கொண்டாராம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.