Rajinikanth: 16 வயதிலேயே தன்னுடைய அறிமுக படத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருக்கிறார் ஹீரோயின் ஒருவர். 16 வயது என்று சொன்னதும் எல்லோருக்கும் ஸ்ரீதேவியை தான் ஞாபகம் வரும்.
ஆனால் அவருடைய வசூல் சாதனையை தூக்கி சாப்பிட்டு இருக்கிறார் இவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டவர் தான் மீனா.
அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் என தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இது மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஹீரோயின்
அதன் பின்னர் மீனா தன்னுடைய 15 வயதில் கதாநாயகி ஆனார். தெலுங்கில் வெங்கடேஷ் நடித்த சாந்தி என்னும் படத்தின் மூலம் தான் ஹீரோயின் ஆனார்.
இந்த படம் பிரபு மற்றும் குஷ்பூ நடித்த தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட சின்னத்தம்பி படத்தின் ரீமேக் தான்.
சாந்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தில் குஷ்பூ கேரக்டரில் மீனா நடித்தார். 1992 ஆம் ஆண்டிலேயே இந்த படம் 16 கோடி வசூல் செய்தது.
அதன் பின் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தென்னிந்திய மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் மீனாவை தேடி வந்து வாய்ப்புகள் கொடுத்தார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து இவர் நடித்த திரிஷ்யம் படமும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்தது.