திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி இன்றுவரை விட்டுக் கொடுக்காத 5 நடிகர்கள்.. பாட்ஷா பாய் கிட்ட இருந்த பழைய கில்லாடி கை

Rajini’s Favorite Hero’s : பொதுவாக எல்லா ஹீரோக்களும் தங்களுக்கு ஆஸ்தான மற்றும் சௌரியமாக இருக்கும் நடிகர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்வார்கள். அப்படி ரஜினிகாந்த் இன்று வரை 5 நடிகர்களை விட்டுக் கொடுத்ததே கிடையாது. எப்படியும் ரஜினிகாந்த் படங்களில் இந்த ஐந்து நடிகர்களுள் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் இருப்பார்கள்.

வி கே ராமசாமி: ரஜினிக்கு ஆரம்பத்தில் இருந்தே இவர் நெருங்கிய நண்பர். வேலைக்காரன் படத்தில் ஆரம்பித்த இந்த பந்தம் கிட்டத்தட்ட அருணாச்சலம் படம் வரை தொடர்ந்தது. ரஜினி வேலைக்காரன் படத்தில் விகே ராமசாமியை பார்த்து “போயா கிழவா” என்று பேசும் வசனம் இன்றுவரை மிக பேமஸ். அதன் பின் வயது மூப்பு காரணமாக விகே ராமசாமி 2002 ஆம் வருடம் காலமானார்.

பாட்ஷா பாய் கிட்ட இருந்த பழைய கில்லாடி கை

தளபதி தினேஷ்: இவர் தளபதி படத்தில் மம்முட்டியின் அடியாட்களுள் ஒருவர். முதல் காசியிலேயே ரஜினி இவரை துவம்சம் செய்வார்.அந்தப் படத்தில் இருந்து தான் தளபதி படம் நகரும். இவர் ரமணா என்னும் கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருப்பார். ரஜினியுடன் தளபதி தினேஷ் நடித்த படங்கள்,

அருணாச்சலம்
பாட்ஷா
சந்திரமுகி

ஜனகராஜ்: பழைய ரஜினி படங்களில் ஜனகராஜ் இல்லாத படங்களை பார்ப்பது மிக மிக அரிது. 90% இவர் ரஜினி படத்தில் இருப்பார் என்பது உறுதியான விஷயம். ரஜினிக்கு நெருங்கிய நண்பராகவே நடித்து வந்த கனகராஜ்ஜின் படங்கள்,

அருணாச்சலம்
படிக்காதவன்
ராஜாதி ராஜா
பாட்ஷா

செந்தில்: கவுண்டமணி இல்லாமல் செந்திலை படங்களில் பார்ப்பது அரிது, அந்த அளவிற்கு இவர்கள் காம்போ வெற்றி பெறும். ஆனால் ரஜினியுடன் பல படங்களில் செந்தில் தனியாகவே காமெடி கேரக்டர்கள் பண்ணி அசத்தியிருக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து காமெடி ரோலில் பட்டைய கிளப்பிய செந்திலின் படங்கள்,

அருணாச்சலம்
படையப்பா
வீரா

நாசர்: ரஜினி கமல் இரண்டு பேருமே நடிகர் நாசரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இவர்களது பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நாசர். வேலைக்காரனில் ஆரம்பித்த பந்தம் சந்திரமுகி, படையப்பா என 90% படங்களில் நடித்திருந்தால் இந்த சகலகலா வல்லவன்.

நகைச்சுவையை மட்டும் மூச்சாக வைத்து வெற்றி கண்ட நடிகர்கள்

Trending News