சனிக்கிழமை, நவம்பர் 30, 2024

ஒரு வழியாக இயக்குனரை முடிவு செய்த ரஜினி.. லேட்டானாலும் வலுவான கூட்டணிய தான் பிடிச்சிருக்காரு

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான அனைத்து படங்களுமே அட்டு ஃபிளாப்பானது. அதிலும் இறுதியாக ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் பயங்கர பில்டப்புடன் வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது விமர்சன ரீதியாக ஏமாற்றம் தந்தது.

ரஜினியின் மனசு கஷ்டப்படகூடாது என்பதற்காக அவரின் ரசிகர்கள் படத்தை ஓட்டி விட்டனர். இருப்பினும் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் தான் இருந்தார். எப்படியாவது அனைவரும் விரும்பும் வகையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒரு சிறந்த இயக்குனரை வெறிகொண்டு தேடி வந்தார்.

ரஜினி சல்லடை போட்டும் தேடும் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது. ரசிகர்கள் மத்தியிலும் ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது ரஜினி அவருக்கான இயக்குனரை தேர்வு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கதை முன்னதாக அமிதாப் பச்சனுக்காக எழுதப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் பால்கி பாலிவுட்டில் சீனிகம், கீ & கா, ஷமிதாப், பேட்மேன் போன்ற ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டிருந்தாலும் அவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பால்கி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவரின் பாவலர் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இளையராஜாவே இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இளையராஜா இறுதியாக கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான வீரா படத்திற்கு இசையமைத்தார். அதன் பின்னர் தற்போது வரை கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகியும் ரஜினி இளையராஜா காம்போ இணையவே இல்லை. எனவே இந்த படத்திலாவது இளையராஜா ரஜினிக்கு இசையமைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அது நடக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News