சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். இந்த அசுர வளர்ச்சியில் பல அவமானங்களையும், கஷ்டங்களையும் சந்தித்துள்ளார். அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது சினிமாவில் முன்னேற நினைக்கும் பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
ஒரு நல்ல நடிகருக்கு படத்தில் நடிக்கும்போதே தெரியும் அது எப்பேர்பட்ட படம் என்று. வெற்றியா, தோல்வியா ரசிகர்களிடம் போய் சேருமா, சேராதா என்பதை கணித்துவிடுவார்கள். அந்த வகையில் ரஜினி கில்லாடி. அவருடைய பல படங்களில் வெற்றி, தோல்வியை முன்னரே கணித்துள்ளார்.
பி வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஒரு கேம் சேஞ்சராக ரஜினி கதாபாத்திரம் இருந்தது. கடைசியில் வேடனாயனாக வரும் ரஜினியின் நடிப்பு அனைவரையும் அசர வைத்தது. சந்திரமுகி படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் திருப்திபடுத்தும் வகையில் அமைந்தது.
இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு ரஜினிகாந்த், பிரபுவை அழைத்து பேசியுள்ளார். சந்திரமுகி படம் ரிலீசான முதல் வாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதன்பிறகு படத்தின் விமர்சனத்தால் மக்கள் கூட்டங்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் வசூலில் சாதனை படைக்கும்.
இதனால் முதல் வாரத்தின் விமர்சனத்தை கண்டு பயப்பட வேண்டாம் என பிரபுவிடம் ரஜினி கூறியுள்ளார். அதேபோல் சந்திரமுகி படம் ரிலீசான போது ஒரு வாரத்திற்கு பின் பட்டிதொட்டியெல்லாம் பரவி செம ஹிட் அடித்தது. ரஜினியின் இந்த கணிப்பை சமீபத்தில் ஏவிஎம் சரவணன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.