வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொடர் தோல்விகளால் கஷ்டத்தில் இருக்கும் ரஜினி.. யாருக்கும் உதவ கூட முடியாத நிலையில் தனது சொத்து மதிப்பு

என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்று கொண்டாடப்பட்டு வரும் ரஜினியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்பது தான் உண்மை. அந்த அளவிற்கு அவர் உலகமெங்கும் பேரும், புகழும் பெற்று இருக்கிறார். அதனாலேயே இவருடைய திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் இவர் தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது. அதில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் இப்படத்தை வேற லெவல் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஏனென்றால் அவர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பல வருடங்கள் ஆகிறது.

Also read: சம்பள விஷயத்தில் பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி.. அஜித், விஜய் தயவு செஞ்சு கத்துக்கோங்க

அதனாலேயே அவர் அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் காட்டி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவரிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 400 கோடியை தாண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவரிடம் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கார்களும் இருக்கிறது.

மேலும் அவர் தற்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு மட்டுமே 40 கோடிக்கு மேல் இருக்கும். இது தவிர தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை இருக்கின்றன. அதன் மூலமாக வரும் வருமானமே எக்க சக்கமாக இருக்கும். இவை அனைத்தும் வெளிப்படையாக தெரிந்த சொத்துக்கள் தான்.

Also read: 28 வருடங்களுக்கு முன்னால் வந்த ரஜினியின் படம்.. இப்போதும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடம்

இன்னும் தெரியாமல் இருக்கும் சொத்துக்களும் ஏராளம் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் அவர் தன் சொந்த சம்பாத்தியத்தின் மூலமே உருவாக்கி இருக்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இப்படி செல்வ செழிப்பில் இருக்கும் ரஜினி பண விஷயத்தில் சில சர்ச்சைகளையும் சந்தித்து இருக்கிறார். அதாவது வருமான வரி சரியாக கட்டவில்லை என்றும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அவர் சம்பளம் கொடுப்பதில்லை என்றும் பல பிரச்சனைகள் எழுந்தது.

ஆனால் இதற்கு ரஜினியின் மனைவி தங்களிடம் பணம் இல்லை என்பது போன்ற நொண்டி சாக்குகளை கூறி சமாளிப்பார். இதை பார்க்கும் பிரபலங்கள் பலரும் கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் கொடுக்க கூட முடியவில்லை என்று கேலி பேசி வருகின்றனர். ஆனால் இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் ரஜினியின் மனைவி தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆஸ்க்காருக்காக ரஜினிக்கு வலைவீசிய அக்கடு தேசத்து இயக்குனர்.. சூப்பர்ஸ்டாரின் புது அவதாரம்

Trending News