வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலர் வெற்றிக்கு காரணமான 2 நடிகர்கள்.. பேராசையில் தலைவர் 170-க்கு கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்

Actor Rajini: மிகப்பெரிய இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்திருக்கும் ஜெயிலர் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு தானே ஆசைப்பட்டேன் என்ற ரேஞ்சில் அவர் இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம்.

அதன் வெளிப்பாடு அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிகிறது என்கிறது திரையுலக வட்டாரம். அது மட்டுமல்லாமல் இந்த ஜெயிலர் வெற்றிக்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து பார்த்த சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விஷயமும் நன்றாக புரிந்து இருக்கிறது.

Also read: கலாநிதி BMW கார் கொடுத்ததன் பின்னணி என்ன தெரியுமா? சன் பிக்சர்ஸ் போட்டுள்ள ஸ்கெட்ச்

அதாவது சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை கலங்கடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் வரவு ஜெயிலரின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. அதை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் தன்னுடைய அடுத்த படமான தலைவர் 170 ல் மல்டி ஸ்டார்களை இறக்க வேண்டும் என்று இயக்குனருக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

ஏற்கனவே ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் தலைவர் இப்படி ஒரு கண்டிஷன் போட்டுள்ளது இயக்குனரை கொஞ்சம் பதற வைத்திருக்கிறது. ஆனாலும் இப்போது மொத்தமாக கதையை மாற்றி பல டாப் ஹீரோக்களை இழுக்கும் வேலையையும் அவர் சத்தம் இல்லாமல் செய்து வருகிறாராம்.

Also read: 1000 கார்ப்பரேட் மூளையை மிஞ்சிய ரஜினி.. சன் பிக்சர்ஸ் வாரித்தின்று ஏப்பம் விட்ட சூப்பர் ஸ்டார்

ஏற்கனவே அமிதாப் பச்சன், நானி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ராணாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் மல்டி ஸ்டார்ஸ் துணையை நம்புவதாகவும் சலசலக்கின்றனர்.

அது மட்டுமின்றி ஜெயிலர் கொடுத்த பேராசையால் தான் அவர் தலைவர் 170ல் மாற்றங்கள் செய்துள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஜெயிலரை விட பல மடங்கு பவராக தலைவர் 170 வரப்போகிறது என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

Also read: முதல் முதலாக கோடு போட்ட அஜித்.. ஜெயிலர் வரை தீயாய் பரவும் பழக்க வழக்கம்

Trending News