திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு தலைமுறையையே நாசமாக்கிய ரஜினி.. எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாலச்சந்தர்

71 வயதிலும் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் காட்டுவதற்கு காரணம் ரசிகர்களிடம் அவருக்கு கிடைக்கும் அமோக ஆதரவு தான். ஏனென்றால் இவருடைய படங்களை எல்லாம் தியேட்டர்களில் திருவிழா போல் கொண்டாடுகின்றனர்.

அதுமட்டுமின்றி இவர் படத்தில் பின்பற்றும் ஸ்டைல் மற்றும் டயலாக் போன்றவற்றை தாரக மந்திரமாகவே எடுத்துக் கொள்வார்கள். அப்படிதான் இவருக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை ரசிகர்களிடம் புகுத்தி ஒரு தலைமுறையையே நாசமாக்கி உள்ளார்.

Also Read: குருவுடன் ரஜினி கொண்டாடும் ஹோலி பண்டிகை.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

அதாவது 1976 ஆம் ஆண்டு ரஜினி ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ரஜினி பெரிய ஆர்டிஸ்ட் இல்லை. அவருக்கென்று தனியாக ரூம் கொடுப்பதும் இல்லை. பாலச்சந்தரின் அசிஸ்டன்ட் சர்மாவுடன் தங்க வைக்கப்பட்டார் ரஜினி.

நைட் முழுவதும் தூங்காமல் சர்மாவை படுத்தியுள்ளார் ரஜினி. தூங்கும் போது அவரை எழுப்பி நான் நன்றாக வந்து விடுவேனா! என்னை மக்கள் ஏற்று கொள்வார்களா! என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு சர்மாவை தூங்கவே விடவில்லையாம் . காலையில் சர்மா பாலசந்தரிடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளார். ‘சார் இவர் நைட் முழுவதும் என்னை தூங்க விடவில்லை.

Also Read: பாலச்சந்தருக்கு இணையாக ரஜினியை வளர்த்து விட்ட பிரபலம்.. மறைமுகமாக சூப்பர் ஸ்டார் செய்த காரியம்

நைட் முழுவதும் சிகரெட் பிடிக்கிறார். அதுமட்டுமின்றி சிகரெட்டில் பல வித்தைகள் காட்டுகிறார்’ என்று போட்டுக் கொடுத்துள்ளார். ரஜினியை கூப்பிட்ட பாலச்சந்தர் சிகரெட் பிடித்து காட்டு என்று கேட்டுள்ளார். ரஜினி நான் பிடிப்பதில்லை என்று பொய் சொல்லி உள்ளார்.

உடனே ரஜினி சட்டை பாக்கெட்டில் கை விட்டு சிகரெட்டை எடுத்து விட்டாராம் பாலசந்தர்.  அதன் பின்தான் சிகரெட்டில் பல ஸ்டைலில் காட்டி அசத்தியுள்ளார் ரஜினி. அதற்காக சிறப்பான மோஷன் கேமராக்கள் வரவழைத்து பாலச்சந்தர் சிகரெட் பிடித்த காட்சிகளை எடுத்துள்ளார். அதன்பின் தான் ஒரு தலைமுறையே சிகரெட் பிடித்து நாசமாகியுள்ளது.

Also Read: 70, 80களில் ஹீரோ, வில்லன் இரண்டிலும் பேர் வாங்கிய நடிகர்.. கமல், ரஜினிக்காக செய்த தியாகம்

Trending News