ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஈடுகட்ட முடியாத இழப்பு.. கடைசியா நண்பனின் முகத்தை பார்க்க ஓடி வந்த ரஜினியின் புகைப்படம்

Rajini stopped shooting: ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நாகர்கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை விரைந்துள்ளார்.

சென்னை வந்த அடுத்த நிமிடமே தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்ததால் வர முடியவில்லை. இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நட்புக்கு இலக்கணம் அவர்தான். விஜயகாந்த் பொதுவாக கோபப்பட்டு பேசக்கூடியவர்தான். ஆனால் அவன் மேல் யாருக்கும் கோபம் வராது, கேப்டனின் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கும். ஒருமுறை கேப்டனுடன் பழகினால் அவரின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.

கேப்டன் என்பது விஜயகாந்த்திற்கு பொருத்தமான பெயர்.  அவர் தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர். ஒருமுறை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ரஜினி அனுமதித்த போது நிறைய பேர் வந்து தொந்தரவு செய்தனர். ஆனால் அங்கு வந்த விஜயகாந்த் 5 நிமிடத்தில் என்ன செய்தார் என்று தெரியவில்லை, தொந்தரவு செய்பவர்களை அனுப்பி விட்டார்.

Also Read: விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.. ஆவேசத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய விசுவாசிகள்

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார்

ரஜினியின் அறைக்கு பக்கத்திலேயே கேப்டனுக்கும் அறை போட சொல்லி யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டவர். அதெல்லாம் மறக்க முடியாது என ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் பேசினார். அது மட்டுமல்ல கேப்டன் உடன் சிங்கப்பூர், மலேசியாவிற்கு நடிகர் சங்கம் சார்பாக சென்றிருந்தோம். அந்த சமயத்தில் ரசிகர்களின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட போது ரெண்டே நிமிடத்தில் எல்லாரையும் அடித்து விரட்டி என்னை பூ மாதிரி அழைத்து வந்தார். அந்த மாதிரியான நபரை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

இவ்வுலகில் வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் வாழ்க! என்று, கடைசி முறையாக தன்னுடைய நண்பரின் முகத்தை பார்க்க ரஜினி ஓடோடி வந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பு மட்டுமல்ல விஜயகாந்தின் மறைவை ஒட்டி, இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா படப்பிடிப்பும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நண்பனின் முகத்தை பார்க்க ஓடி வந்த ரஜினி

rajini-captain-cinemapettai
rajini-captain-cinemapettai

Also Read: பிறவி கலைஞர், அவன நடிக்க விடுங்க.. முதுகுல குத்துனவருக்கும் சிபாரிசு செய்த கேப்டனின் பெருந்தன்மை

Trending News