வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் தம்பியை கூப்பிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? உங்க லெவலுக்கு யாரையும் யோசிக்க கூட முடியல

Rajinikanth: சூப்பர் ஸ்டார் எப்போதுமே தனித்துவமிக்க நபர் தான். இதை நாம் பல சம்பவங்களின் மூலம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். அதன்படி தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவல் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு யாரையும் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனாலேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க தற்போது படத்தின் ப்ரமோஷனும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதில் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள விஜய்யின் தம்பி விக்ராந்த் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் பற்றி தெரிவித்துள்ளார். ரஜினி எப்போதுமே தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தலைகனத்துடன் இருக்க மாட்டார்.

Also read: அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி.. ட்ரெய்லருக்கே விழி பிதுங்கும் பெரிய தலைகள்

இப்போதும் கூட அவர் தன்னை ஒரு பாலச்சந்தரின் சிஷ்யனாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் சூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது யோசித்தப்படியே இருப்பார். ஒருநாள் நான் அவரிடம் இது குறித்து கேட்டேன். அப்போது அவர் ஒரு காட்சியில் ஒரு வினாடியை கூட வீணடிக்க விரும்பவில்லை.

அதில் எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் ஒரு நாள் அவர் என்னை கூப்பிட்டு நீங்கள் ஒரு சிறந்த நடிகர், லால் சலாம் படம் வெளியான பிறகு பாருங்கள் உங்களுடைய வாழ்க்கை மாறிவிடும் என்று கூறினார்.

அவ்வளவு பெரிய நடிகர் அப்படி கூறியது எனக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த வயதிலும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கொண்டே இருக்கிறது என விக்ராந்த் ரஜினியை பாராட்டி தள்ளி இருக்கிறார்.

Also read: ரஜினிக்கு போட்டியாக வரும் மோட்டார் மோகனின் படம்.. மீடியா முன் மணிகண்டன் கூறிய பதில்

Trending News