திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

அதையும் ஒரு கை பார்த்திடலாம்.. ஹீரோயிசம் காட்டாமல் ரஜினி ஜெயித்துக் காட்டிய 5 படங்கள்

தமிழ் சினிமாவிற்கு வில்லனாகவும் குணச்சித்திர நடிகராக அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 71 ஆவது வயதிலும் கதாநாயகனாக தனது 169 படத்திலும் நடித்துக் கொண்டிருப்பது அவருடைய உழைப்பிற்கு கிடைத்துக்கொண்டிருக்கும் அங்கீகாரம் என்றே சொல்லலாம். அப்படி இவர் நடித்த ஒரு சில படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒரு மாஸ் ஹீரோவாக அதிலும் ஹீரோயிசம் காட்டி தும்சம் செய்திருப்பார்.

எங்கேயோ கேட்ட குரல்: 1982 ஆம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரித்து கதை வசனம் எழுதிய இந்தப் படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கி இருப்பார். கதாநாயகனாக ரஜினி நடிக்க ராதா, அம்பிகா, டெல்லிகணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் ரஜினியை பிடிக்காமல் திருமணம் செய்துகொள்ளும் அம்பிகா, அதன்பிறகு தனக்கு பிறந்த குழந்தையை விட்டுவிட்டு நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காக ஊர் பெரியவர் மகன் சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு அதனுடன் சென்னை கிளம்புவாள்.

பிறகு ரஜினியின் மகள் மீனாவை பார்த்துக்கொள்ள ராதாவை இரண்டாவது திருமணம் செய்து வைப்பார்கள். அம்பிகா சென்னை போன பிறகுதான், தான்செய்தது தவறு என தெரிந்து மீண்டும் ஊருக்கு வருவாள். ஆனால் ஊர் பெரியவர்கள் அவளை ஊரை விட்டு ஒதுக்கி போட்டு விடுவார்கள். அதன் பிறகு ஊர் ஒதுக்குப்புறமாக குடிசை போட்டு 18 வருடங்களாகவே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பிகா, ஒரு கட்டத்தில் இருந்துவிட தான் இறந்தால் எனக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் ரஜினி செய்ய வேண்டும் என அவளுடைய கடைசி ஆசையை ரஜினியிடம் சொல்கிறார். அதன்பிறகு ஊராரை எதிர்த்து அம்பிகாவிற்கு ஈமச்சடங்கை ரஜினி செய்து முடிப்பார். இப்படி ரஜினி கதையின் போக்கிலேயே தன்னை மாற்றிக் கொண்டு அவ்வாறே நடித்து ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தாமல் இந்தப்படத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்.

ஜானி: 1980ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் ரஜினி இரட்டை வேடத்தில் ஜானி மற்றும் வித்யாசாகராக நடித்திருப்பார். இதில் ஜானி கைவந்த திருட்டுத் தொழிலை மேற்கொண்டு போலீசாரிடம் அவ்வப்போது சிக்கிக் கொண்டு இருப்பான். அவனை பாடகியான ஸ்ரீதேவி காதலிக்கிறாள். ஆனால் ஜானி தனது மறுபக்கத்தை கூற முடியாததால் அவள் காதலை ஏற்கும் தகுதியற்றவனாக நினைக்கிறான்.

இதனால் மன கவலையில் ஸ்ரீதேவி பாடுவதை நிறுத்தி விடுகிறார். மறுபுறம் பணக்காரராக இருக்கும் வித்யாசாகர் வீட்டு வேலைக்காரி பாமாவை விரும்ப, அவள் வேறு ஒரு பணக்காரன் உடன் ஓட திட்டமிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த வித்தியாசாகர் அவளைக் கொன்றுவிட அந்தப்பழி ஜானின் மேல் விழுகிறது. இதன்பிறகு ஜானியை பிடிக்காதவர்கள் வித்யாசாகரை ஜானி என்று நினைத்து துரத்த, அவர் ஸ்ரீதேவி வீட்டிற்குள் நுழைகிறான், அங்கு தான் வித்யாசாகருக்கு ஜானி-ஸ்ரீதேவி காதல் தெரிய வர, அவர்களை சேர்த்து வைப்பதற்காக ஒரு திட்டம் தீட்டி, அதன்பிறகு ஜானி மேலிருக்கும் எல்லாக் குற்றத்தையும் தன் மீது சுமத்திக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறான்.

ஆறிலிருந்து அறுபது வரை: 1979ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் மூத்த மகனாக ரஜினி தன்னுடைய தங்கை, இரு தம்பிகளை வளர்த்து படாதபாடுபட்டு ஆளாகிறான். ஒரு கட்டத்தில் தங்கை மதிக்காமல் போக, தம்பிகளும் தங்கள் மனைவிகளை வைத்து அவமானப்படுத்தியதால், ரஜினி தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஒரு குடிசை வீட்டிற்கு குடியேறுகிறார்.

அங்கு ரஜினி அச்சகத்தில் மெய்ப்புத் திருத்தல் வேலை செய்துகொண்டே, கதை ஒன்றை எழுதுகிறான். அந்த கதை வெளியாவதற்கு முன்பே தீவிபத்தில் அவர்களது இரு குழந்தை இறந்துவிட, அவர்களுடைய காப்பீட்டுத்தொகை ரஜினிக்கு கிடைக்கிறது. இதன் பிறகு ரஜினி எழுதிய கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசதியும் வந்துவிடுகிறது. பின்பு தம்பி தங்கைகள் ரஜினியை தங்களுடைய அண்ணன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றனர்.

கை கொடுக்கும் கை: 1984 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இதில் கதாநாயகியாக ரஜினிக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார் படத்தின் தலைப்புக்கு ஏற்பவே கண்ணு தெரியாமல் இருக்கும் ரேவதி படும் கஷ்டத்தை ரஜினி பார்த்து அவளுக்கு கண்ணுக்கு கண்ணாக இருக்க வேண்டுமென திருமணம் செய்துகொண்டு தன்னுடனே அழைத்து செல்வார் இதுதான் இந்த படத்தின் கதை.

முள்ளும் மலரும்: 1972ஆம் ஆண்டு மகேந்திரன் திரைக்கதை வசன இயக்கத்தில்ட வெளிவந்த இந்தப் படத்தின் கதை, கல்கி இதழில் தொடராக உமாசந்திரன் எழுதி அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்தப் படத்தில் ரஜினி கடமை தவறாத தொழிலதிபராக இருப்பதினால், அவருக்கு வேண்டாதவர்களால் சதித் திட்டம் தீட்டி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆத்திரம் அடைந்த ரஜினி குடித்துவிட்டு விபத்துக்குள்ளாகி வேலை இல்லாமல் போகிறது. ஆனால் ரஜினி விரைவில் தனது சகோதரியின் திருமண நடத்த வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால், அதை எப்படி சமாளித்து தன்னுடைய குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

- Advertisement -spot_img

Trending News