வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

73 வயதில் செம ஸ்பீடில் இருக்கும் ரஜினி.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் தலைவர்

Rajini – Vijay : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பு தான். 73 வயதாகியும் ஒரு படத்தின் கதாநாயகனாக தற்போது வரை நடித்து வருவது சாதாரண விஷயம் இல்லை. அந்த வகையில் கடைசியாக ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இப்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மற்றொருபுறம் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

மேலும் அதற்குள்ளாகவே இப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். அதாவது ஜெயிலர் படத்தில் அவரது மகன் இறந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பேரனை வைத்து தான் மொத்த கதையும் நகர இருக்கிறதாம்.

Also Read : ரஜினியை வம்புக்கு இழுத்து விஜய்யை அசிங்கப்படுத்திய கூட்டம்.. திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியா? எல்லாம் கர்மா bro

மேலும் விரைவில் ஸ்கிரிப்ட் தயாரான உடன் படமும் தொடங்கப்பட இருக்கிறது. விஜய் கூட ஒரு படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கமிட் ஆகிறார். ஆனால் ரஜினி செம ஸ்பீடாக தொடர்ந்து படங்களை புக் செய்து வருகிறார். எப்போதும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் விஜய் இப்போது அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அஜித்தும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் கொடுக்கலாம் என்ற நிலையில் தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறார். ஆனால் தலைவர் 73 வயதில் இவர்களை ஓவர்டேக் செய்து வரிசையாக படங்களில் நடிக்க இருக்கிறார்.

Also Read : ரஜினிகாந்த் அழைத்தும் 2 படங்களுக்கு நோ சொல்லி கெத்து காட்டிய 90ஸ் ஃபேவரிட்.. இப்ப புலம்பி என்னத்துக்கு

Trending News