இன்று ரசிகர்கள் மனதில் ஒரு தலைவராக சூப்பர் ஸ்டார் எனும் அடையாளத்தோடு புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். இவர் சினிமாவில் நடிக்க வந்தபோது பாலச்சந்தர் ஏற்கனவே சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகர் இருப்பதால் அவருக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தார்.
அதன் பிறகு அவர் தன் ஒரிஜினல் பெயரையே மறக்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டாராக உலக அளவில் புகழ் பெற்று இருக்கிறார். மராத்தி குடும்பத்தில் பிறந்த இவரின் அப்பா பெயர் ராமோஜி ராவ், அம்மா ஜீஜாபாய். இவர்களின் பெயரை ரஜினி ஒரு தமிழ் திரைப்படத்தில் குறிப்பிட்டு பேசி இருப்பார்.
பி வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் மன்னன். இப்படத்தில் ரஜினி, குஷ்பூ, விஜயசாந்தி, விசு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில்தான் ரஜினி தன் பெற்றோர்களை பற்றி கூறுவார்.
அதில் விசுவை வில்லன் கோஷ்டி தாக்க வரும் போது ரஜினி அவரை வந்து காப்பாற்றுவார். அப்போது மருத்துவமனையில் விசு ரஜினியிடம் இதற்கு முன்பு நீ எங்கு வேலை பார்த்தாய் என்று கேட்பார். அதற்கு ரஜினி ராமோஜிராவ் சிவாஜிராவ் ஜிஜாபாய் பிரைவேட் லிமிடெட் என்று சொல்லுவார்.
இப்படி ஒரு கம்பெனியை கேள்விப்பட்டிராத விசு குழப்பம் அடைவார். அதன் பிறகு ரஜினியை தன்னுடைய கம்பெனியில் சேர்ந்து கொள்ளும்படி அவர் கூறுவார். இதுதான் ரஜினிகாந்த் தன் அம்மா, அப்பாவின் பெயரை யூஸ் பண்ணிய ஒரே திரைப்படம்.
என்னதான் ரசிகர்களிடம் ரஜினி பிரபலமாக இருந்தாலும் அவருடைய அம்மா, அப்பா பற்றிய தகவல், போட்டோக்கள் என்று பலருக்கும் தெரியாது. அதேபோன்று மன்னன் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இருப்பதை பலரும் கவனித்தது கிடையாது. அந்த வகையில் இது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய செய்தியாக இருக்கிறது.