வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விடுமுறையில் வேட்டையாடிய வேட்டையன்.. 4வது நாள் செய்த கலெக்ஷன்

Vettaiyan Collection : கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி தொடர் விடுமுறையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியானது. அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படம் வெளியான முதல் நாளே நல்ல வசூலை பெற்றிருந்தது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வேட்டையன் டிசாஸ்டர் என்று டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இதனால் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதோடு ஜீவாவின் பிளாக் படம் வெளியானது.

சில காலம் தோல்வி படங்களை கொடுத்து வந்த ஜீவாவுக்கு பிளாக் படம் கம்பேக்காக அமைந்திருக்கிறது. இதனால் வேட்டையன் படம் ஒளிபரப்பான சில தியேட்டர்களில் பிளாக் படம் திரையிடப்பட்டது. இருந்தபோதும் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்டையன் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டரில் ரசிகர்கள் அலை மோதினர்.

வேட்டையன் படத்தின் நான்காவது நாள் கலெக்ஷன்

இதனால் இப்போது படத்தின் வசூலும் அதிகரித்திருக்கிறது. லைக்கா தயாரிப்பில் உருவாக்கின வேட்டையன் மூன்று நாட்களில் மொத்தமாக 95 கோடி வசூல் செய்திருந்தது. நேற்றைய தினம் மட்டும் சுமார் 25 கோடி வசூலை பெற்றிருந்தது.

இதன் காரணமாக தற்போது 120 கோடி வசூலை மொத்தமாக வேட்டையன் படம் வேட்டையாடி உள்ளது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடியில் எடுக்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் போட்ட பணத்தை லைக்கா எடுக்க உள்ளது. அதோடு மிக விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வேட்டையன் வெளியாக இருக்கிறது.

அமேசான் இப்படத்தை 62 கோடி கொடுத்து வங்கி இருந்தது. இது தவிர டிஜிட்டல் உரிமை என பல கோடிகளை வேட்டையன் ஏற்கனவே குவித்திருக்கிறது. இதனால் லைக்கா நிறுவனத்திற்கு வேட்டையன் படத்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இனி வருவதே எல்லாமே லாபம் தான்.

Trending News