வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 ஜூன் ரிலீஸ், அப்போ வேட்டையன்?. லைக்கா வெளியிட்டுள்ள போஸ்டர்

Actor Rajini : 2024 ஆம் ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. அந்த வகையில் கமல் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வந்த இந்தியன் 2 படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இந்த புதிய போஸ்டர் உடன் லைக்கா நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். வேட்டையன் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அக்டோபரில் வெளியாகும் ரஜினியின் வேட்டையன்

ஆனால் இப்போது லைக்கா படத்தின் ரிலீஸ் தேதி உடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வருகின்ற அக்டோபர் மாதம் தான் வேட்டையன் படம் வெளியாகிறது.

vettaiyan-poster
vettaiyan-poster

ரஜினி மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் அந்த போஸ்டரில் இருக்கிறார். ரஜினி கதாநாயகனாக கடைசியாக நடித்த ஜெயிலர் படம் வசூலில் பட்டையை கிளப்பியது. அவர் கேமியோ தோற்றத்தில் நடித்த லால் சலாம் பெரிய அளவில் போகவில்லை.

ஆனால் வேட்டையன் படம் கண்டிப்பாக ரஜினியின் கேரியரில் மைக்கலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டர் பார்க்கும்போது பக்கா ஆக்சன் கதைகளைத்துடன் வேட்டையன் படம் உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Trending News