வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளும் வேட்டையன்.. இதுவரை கலெக்சன் எவ்வளவு தெரியுமா.?

Rajini: ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் வருகின்ற அக்டோபர் 10 திரைக்கு வர இருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளதால் தலைவர் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்த சூழலில் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படம் 400 கோடியை தாண்டி வசூல் வேட்டை ஆடியது. அதன் பிறகு வெளியான லால் சலாம் பெரிய அளவில் போகவில்லை.

வேட்டையன் படம் கண்டிப்பாக 500 கோடியை தாண்டும் என பல பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களையும் கவருவதற்காக பெரிய நட்சத்திரங்களை வேட்டையன் படத்தில் இடம்பெற செய்துள்ளனர்.

வேட்டையன் ப்ரீ புக்கிங் கலெக்ஷன்

அதன்படி அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி போன்ற பிரபலங்கள் வேட்டையன் படத்தில் இணைந்துள்ளனர். இதனாலையே படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் சக்கை போடு போட்டு வருகிறது.

அதன்படி இப்போதே கிட்டத்தட்ட 9 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங்கில் கலெக்ஷன் அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் ரஜினி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் அவரது ரசிகர்கள் அங்க பிரதேசம் செய்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பல பிரபலங்களும் சமூக ஊடகங்களில் பதிவு போட்டு வருகிறார்கள். வேட்டையன் படம் வெற்றியடைந்தால் கண்டிப்பாக ரஜினிக்கு புது உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சூடு பிடிக்கும் வேட்டையன்

Trending News