தமிழ் சினிமாவிற்கு 1936-இல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார். அதன்பின் சின்னச்சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன்னுடைய 50 வயதுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் சினிமாவில் ஹீரோவாக கொடி கட்டு பறந்து மக்களின் புரட்சித் தலைவராக மாறினார்.
இப்படி ஹீரோவாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர் கடைசியாக நடித்த படம் அவசர போலீஸ் 100. அந்தப் படத்தில் பாதியில் அவர் மறைந்து விடவே அந்த கதாபாத்திரத்தை வேறுமாதிரி உருவாக்கியவர் எம்ஜிஆர் தனது சிஷ்யப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட பாக்கியராஜ்.
எம்ஜிஆர் நடித்த 1955 ஆம் ஆண்டு வெளிவந்த படம் குலேபகாவலி. இந்தப்படம் எம்ஜிஆருக்கு சூப்பர் ஹிட்டானது. நீண்ட நாட்கள் திரையரங்கை ஆட்சி செய்த இந்த படம் ஒரு சிறந்த ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக உருவாகி மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
இந்த படத்தை டிஆர் ராமண்ணா இயக்கி ஆர் ஆர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது இதில் எம்ஜிஆரின் தனித்துவமான நடிப்பு மக்களால் வியந்து பேசப்பட்டு படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை பெற்றது எனவே அந்தக் காலத்தில் புகழ்பெற்ற இந்தப் படத்தை ரஜினிகாந்த் ரொம்ப விரும்பிய படமாகும்.
அப்பொழுது பிளாக் அண்ட் ஒயிட் ஆக வெளிவந்த இந்த படத்தை இப்பொழுது கலரில் ரஜினியை வைத்து ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றுவரை ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார். ரஜினிக்கும் இந்த படம் ஒரு கனவு படம் என்றும் அவர் நிச்சயமாக இதில் நடிக்க தயாராக இருக்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரஜினி நினைத்தது போல் இந்த படம் எடுக்கப்பட்டால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.